பனாஸ்காண்டா மாவட்டம்
பனஸ்கந்தா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() வடகிழக்கு குஜராத்தில் பனஸ்கந்தா அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
தலைமையகம் | பலான்பூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,400.16 km2 (4,015.52 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,504,244 |
• அடர்த்தி | 233/km2 (600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
இணையதளம் | https://banaskantha.nic.in |
பனாஸ்காண்டா மாவட்டம் அல்லது பனஸ்கந்தா மாவட்டம் (Banaskantha district) இந்திய மாநிலமாகிய குஜராத்தில் உள்ளது. இதன் தலைமையகம் பாலன்பூர் நகரில் உள்ளது. இங்கு பாயும் பனாஸ் ஆற்றின் காரணமாக மாவட்டத்திற்கு பனாஸ்காண்டா எனப் பெயரிடப்பட்டது.
புவிப்பரப்பு[தொகு]
இது 10,751 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. பரப்பளவின் அடிப்படையில் குஜராத்தின் மூன்றாவது பெரிய மாவட்டமாக உள்ளது.
பொருளாதாரம்[தொகு]
இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தில் உணவுப் பண்டங்களும், சுற்றுலாத் துறையும், துணி உற்பத்தியும் பெரும்பங்கு வகிக்கின்றனர். சோளம், புகையிலை உள்ளிட்ட பொருட்களை விளைவிக்கின்றனர். எண்ணெய் வித்துக்களை ஏற்றுமதி செய்கின்றனர். வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசின் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [1]
பிரிவுகள்[தொகு]
இது 12 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
|
|
போக்குவரத்து[தொகு]
பாலன்பூர், தீசா உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தில் உள்ள பிற நகரங்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் மூலம் ராஜஸ்தானுக்குப் போய் வரலாம்.
மக்கள் தொகை[தொகு]
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 3,116,045 மக்கள் வாழ்கின்றனர். [2]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 296 பேர் வாழ்கின்றனர். [2] பால்விகிதக் கணக்கெடுப்பில், சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 936 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2] இங்கு வாழ்பவர்களில் 66.39% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]
சான்றுகள்[தொகு]
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
இணைப்புகள்[தொகு]
![]() |
ஜலோர் மாவட்டம், ராஜஸ்தான் | சிரோகி மாவட்டம், ராஜஸ்தான் | ![]() | |
கட்சு மாவட்டம் | ![]() |
சபர்கந்தா மாவட்டம் | ||
| ||||
![]() | ||||
பதான் மாவட்டம் | மகிசனா மாவட்டம் |