உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூனாகத்

ஆள்கூறுகள்: 21°31′20″N 70°27′28″E / 21.5222°N 70.4579°E / 21.5222; 70.4579
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூனாகத்
જૂનાગઢ
நகரம்
ஜூனாகத் நகர வாயில்
ஜூனாகத் நகர வாயில்
ஜூனாகத் is located in குசராத்து
ஜூனாகத்
ஜூனாகத்
ஜூனாகத், குசராத்து
ஆள்கூறுகள்: 21°31′20″N 70°27′28″E / 21.5222°N 70.4579°E / 21.5222; 70.4579[1]
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ஜூனாகத்
அரசு
 • நிர்வாகம்ஜூனாகத் மாநகராட்சி
 • மேயர்ஜிதேந்திரபாய் ஹிர்பரா
 • மாநகராட்சி ஆணையாளர்பி. கே. தாக்கூர்
 • சட்டமன்ற உறுப்பினர்மகேந்திர மாசூரு
 • மக்களவை உறுப்பினர்ராஜேஸ் சூடசமா
பரப்பளவு
 • மொத்தம்59 km2 (23 sq mi)
ஏற்றம்
102.27 m (335.53 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்3,20,250
 • அடர்த்தி5,400/km2 (14,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சலக சுட்டு எண்
36200x
தொலைபேசி குறியீடு+91285xxxxxxx
வாகனப் பதிவுGJ-11
நகர நிர்வாகம்ஜூனாகாத் மாநகராட்சி
இணையதளம்www.junagadhmunicipal.org

ஜூனாகத் (Junagadh, ஒலிப்பு, குசராத்தி: જુનાગઢ) என்பது இந்தியாவின் குஜராத் மாநில சௌராஷ்டிரப் பகுதியில், ஜூனாகத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். குஜராத்தி மொழியில், ஜூனாகத் எனில் பழைய துறைமுகம் எனப் பொருள். குஜராத்தின் 7வது பெரிய நகரம். ஜுனாகத் பகுதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இசுலாமிய மன்னராட்சி நாடாக இருந்தது. இந்திய விடுதலைக்குப்பின்பு, சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் ஜூனாகத் அரசு, இந்தியாவுடன் இணைந்தது.

ஜூனாகத்தை ஆண்டவர்கள்[தொகு]

ஆண்டவர்கள் காலம்[2]
மௌரிய அரச குலம் கி. மு., 319
கலிங்க அரசு குலம் கி. மு., 185
கிரேக்கர்கள் கி. மு 73-70
சக அரச குலம் கி. பி., 100-275
சத்ரபா அரச குலம் கி. பி., 276-455
குப்த அரச குலம் கி. பி., 456-770
சூடசாமா அரசகுலம் கி. பி., 875-1472
முகமது பேக்டா, கலீல் கான் கி. பி., 1472-1572
மொகலாயர்கள் கி. பி., 1573-1748
பாபி குல நவாப் (யூசூப் பதான்) கி. பி., 1749-1949

நிலவியல்[தொகு]

ஜூனாகத், கடல் மட்டத்திலிருந்து சுமார் 335.53 அடி உயரத்தில், 21°31′20″N 70°27′28″E / 21.5222°N 70.4579°E / 21.5222; 70.4579[2] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜூனாகத்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27.2
(81)
28.3
(82.9)
31.4
(88.5)
32.7
(90.9)
33.4
(92.1)
32.9
(91.2)
30
(86)
29.3
(84.7)
30.1
(86.2)
32.5
(90.5)
31.6
(88.9)
28.7
(83.7)
30.68
(87.22)
தாழ் சராசரி °C (°F) 13.1
(55.6)
14.7
(58.5)
18.1
(64.6)
21.6
(70.9)
25.2
(77.4)
26.5
(79.7)
25.7
(78.3)
24.7
(76.5)
23.9
(75)
21.9
(71.4)
18.3
(64.9)
14.9
(58.8)
20.72
(69.29)
பொழிவு mm (inches) 0
(0)
0
(0)
2
(0.08)
1
(0.04)
3
(0.12)
118
(4.65)
372
(14.65)
191
(7.52)
116
(4.57)
19
(0.75)
5
(0.2)
1
(0.04)
828
(32.6)
ஆதாரம்: Climate-Data.org[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஜூனாகத் மாநகராட்சிப் பகுதியின் மக்கட்தொகை 320,250 ஆகும்.[1] பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 952 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 88.63% ஆக உள்ளது.

ஜூனாகத் பகுதி சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ளதால், இங்கு வாழும் மக்கள் தங்களை சௌராஷ்ட்ரீகள் என்றும் கத்தியவாரிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். ஜூனாகாத்தில், இந்து, இசுலாமியர், சமணர்கள் மற்றும் கிறித்தவர்கள் வாழ்கின்றனர். குஜராத்தி, சிந்தி, இந்தி மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

அசோகர் கல்வெட்டுக்கள்[தொகு]

அசோகரின் 14 கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் ஜூனாகத்திலும், ஒரு கல்வெட்டு கிர்நார் மலையிலும் உள்ளன. [4]

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

  1. எட்டாயிரம் படிகளும் 3661அடி உயரமும் கொண்ட கிர்நார் மலைக் கோயில்.[5]
  2. கிர்நார்
  3. மகபத் மக்பாரா மசூதி
  4. வன உயிரினங்களின் அருங்காட்சியகம்
  5. உபர்கோட் கோட்டை
  6. சக்கர்பாக் உயிரியல் தோட்டம்
  7. காயத்திரி மற்றும் வாகேஸ்வரி கோயில்
  8. தாமோதரன் கோயில்
  9. அறிவியல் அருங்காட்சியகம்[6]
  10. வெல்லிங்டன் அணை.[7]
  11. மோதி தாவரவியல் பூங்கா
  12. முசுகுந்தன் குகைகள்.[8]
  13. ஆயுர்வேத அருங்காட்சியகம்
  14. நரசிங் மேத்தா ஏரி
  15. போதிநாத் சிவன் கோயில்

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (pdf). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  2. "History of Junagadh". Archived from the original on 25 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Climate Data for Junagadh". பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
  4. The Edicts of King Asoka
  5. http://sss.vn.ua/india/gujarat/junagarh/index2en.htm photo gallery
  6. "Science Museum". Holiday IQ. Archived from the original on 2014-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-03-04.
  7. "Willingdon Dam". Harmoney Hotel.
  8. "Places to Visit". gujaratcityguide.com. Archived from the original on 2013-05-15. பார்க்கப்பட்ட நாள் 2015-03-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூனாகத்&oldid=3930442" இலிருந்து மீள்விக்கப்பட்டது