மோர்பி
மோர்பி | |
---|---|
அடைபெயர்(கள்): சௌராஷ்டிர தீபகற்பத்தின் பாரிஸ் | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | மோர்பி |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 2,50,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 363641 & 363642 |
வாகனப் பதிவு | GJ-36 |
மோர்பி (Morbi or Morvi), இந்தியா, குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இந்நகரம் மச்சு ஆற்றாங்கரையில், சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்துள்ளது. ராஜ்கோட் நகரத்திலிருந்து 60 கி. மீ., தொலைவில் உள்ளது.
பருத்தி, தானியங்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்களாகும்.
ராஜபுத்திர ஜடேஜா மன்னர் குலத்தினர் இந்நகரை தலைநகராகக் கொண்டு, இந்தியா விடுதலைக்கு முன் வரை ஆண்டனர். [1].[2].
பொருளாதாரம்[தொகு]
மோர்பி நகரம், இந்தியாவின் பீங்கான் பொருட்கள் உற்பத்தியில் 70 விழுக்காடும், உலக அளவில் 5 விழுக்காடும் கொண்டுள்ளது. [3]. இந்தியாவில் தயாரிக்கப்படும் சி எப் எல் மின் விளக்குகள் உற்பத்தியில் 80 விழுக்காடு வரை மோர்பி நகரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மோர்பி, சுவர் கடிகார உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
போக்குவரத்து வசதிகள்[தொகு]
தேசிய நெடுஞ்சாலை எண். 8ஏ மற்றும் மாநில நெடுஞ்சாலை எண். 7, குஜராத் மாநிலத்தின் பிற பகுதிகளை, மோர்பி நகரத்துடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Morvi, The Jadeja Dynasty", Royal Ark
- ↑ Morvi (Princely State)
- ↑ [http://www.businessworld.in/news/corporate/tale-of-a-city-how-morbi-lost-the-plot/1370362/page-0.html Tale Of A City: How Morbi Lost The Plot