ஆதி காதி கிணறு

ஆள்கூறுகள்: 21°31′36″N 70°28′17″E / 21.526628°N 70.471289°E / 21.526628; 70.471289
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி காதி கிணறு
கிணற்றின் வழி
Map
பொதுவான தகவல்கள்
வகைபவோலி
கட்டிடக்கலை பாணிஇந்தியக் கட்டிடக்கலை
இடம்உபர்கோட் கோட்டை
நகரம்ஜூனாகத்
நாடுஇந்தியா
ஆள்கூற்று21°31′36″N 70°28′17″E / 21.526628°N 70.471289°E / 21.526628; 70.471289
நிறைவுற்றதுநிச்சயமற்றது
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)உள்ளூர் பானி
பதவிகள்இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

ஆதி காதி கிணறு (Adi Kadi Vav) அல்லது ஆதி காதி வாவ் என்பது இந்தியாவின் குசராத்தின் ஜூனாகத்தின், உபர்கோட் கோட்டையிலுள்ள ஓர் படிக்கட்டுக் கிணறாகும். இதன் கட்டுமான தேதி நிச்சயமற்றது.

வரலாறு[தொகு]

ஜூனாகத் மாவட்ட நிர்வாக இணையதளத்தின் படி, படிக்கட்டு கிணறு 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1] [2] இது 10ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டில் சுடாசம வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது என்று மற்ற ஆதாரங்கள் கூறுகின்றன. [3] [2] [4] மற்றொரு ஆதாரம் இது கிமு 319இல் கட்டப்பட்டது என்றும், கிபி 976 இல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறுகிறது. [2]

உள்ளூர் வரலாற்றாசிரியர் பரிமல் ரூபானியின் கூற்றுப்படி, இரண்டு தனித்தனி படிக்கட்டுகள் இருந்தன. அது ஆதி படிக்கிணறு, காதி படிக்கிணறு இன்னும் புதைந்து கிடக்கிறது என்பது அவர் கருத்து.[4]


இது குசராத்து மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும் (S-GJ-114).

கட்டிடக்கலை[தொகு]

ஆதி காதி கிணறு என்பது நந்தா வகை படித்துறை. [2] இது கட்டப்படவில்லை ஆனால் திடமான இயற்கையான பாறையில் செதுக்கப்பட்டது. கிணற்றுத் தண்டுக்குச் செல்ல ஒரு குறுகிய நடைபாதையில் 166 படிகள் கொண்ட அமைப்பு உள்ளது. [4] கிணற்றுக்கு மேலே மெல்லிய பாறை அடுக்கில் ஒரு சிறிய சாரளம் செதுக்கப்பட்டுள்ளது. [5] பாறை அடுக்குகள் அரிக்கப்பட்ட சுவர்களில் தெரியும். [6] கிணறு 123 அடி ஆழம் கொண்டது. [4] மற்ற படிக்கட்டுக் கிணறுகளில் உள்ளது போல் இதில் இல்லை. [2]

பிரபல கலாச்சாரத்தில்[தொகு]

இதன் பெயர் பற்றிய ஒரு கதையின் படி, படிக்கட்டுக் கிணறு கட்டப்பட்டபோது, தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால் அரச குருவின் அறிவுறுத்தலின் பேரில், ஆதி மற்றும் காதி என்ற இரண்டு திருமணமாகாத சிறுமிகள் பலி கொடுக்கப்பட்டு தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு புராணக்கதை ஆதியும் காதியும் படிக்கிணற்றில் இருந்து தினமும் தண்ணீர் எடுக்கும் அரச பணிப்பெண்கள் என்று கூறுகிறது. [1] மக்கள் அவர்களை நினைவுகூரும் வகையில் அருகிலுள்ள மரத்தில் துணிகளையும் வளையல்களையும் தொங்கவிடுகிறார்கள். [4] [2]

புகைப்படங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Adi Kadi Vav". District Junagadh, Government of Gujarat (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Chakrabarti. Critical Themes in Environmental History of India. SAGE Publishing India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5388-316-4. https://books.google.com/books?id=RljsDwAAQBAJ&dq=Adi+Kadi+Vav&pg=PA124. 
  3. Jain-Neubauer (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-391-02284-3. https://books.google.com/books?id=61fSwBF4bbYC. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Bhatt. Her Space, Her Story: Exploring the Stepwells of Gujarat. Zubaan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84757-08-3. https://books.google.com/books?id=tWmiDAAAQBAJ&dq=Adi+Kadi+Vav&pg=PT43. 
  5. Livingston, Morna (April 2002). Steps to Water: The Ancient Stepwells of India. Princeton Architectural Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56898-324-0. https://books.google.com/books?id=KoVCliqcmIIC. 
  6. Desai, Anjali H.. India Guide Gujarat. India Guide Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9789517-0-2. https://books.google.com/books?id=gZRLGZNZEoEC&pg=PA254. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_காதி_கிணறு&oldid=3328260" இலிருந்து மீள்விக்கப்பட்டது