உள்ளடக்கத்துக்குச் செல்

பவநகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 21°46′13″N 72°08′35″E / 21.77028°N 72.14306°E / 21.77028; 72.14306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜாபராகொடியார் கோயில் நுழைவாயில்
15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

பவநகர் மாவட்டம் (Bhavnagar district) தென்கிழக்கு குஜராத் மாநிலத்தில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராஷ்ட்டிர பகுதியில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டம் 8334 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 800 கிராமங்களும் கொண்டது. பாவ்நகர் மாவட்டத்தின் தலைமையகம் பாவ்நகர். பாவ்நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலிதான சமணர் கோயில்கள் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.

பாவ்நகர் மாவட்டத்தின் எல்லைகள்

[தொகு]

பவநகரைத் தலைமையிடமாக கொண்ட, பாவ்நகர் மாவட்டத்தின் வடக்கில் சுரேந்திரநகர் மாவட்டம், வடமேற்கில் ராஜ்கோட் மாவட்டமும், மேற்கில் அம்ரேலி மாவட்டம், தெற்கில் அம்ரேலி மாவட்டமும் காம்பே வளைகுடாவும், கிழக்கே காம்பே வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.[2]

மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாவ்நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை 23,88,291 ஆகும்.[3] மககட்தொகை கணக்குப்படி பாவ்நகர் மாவட்டம், 640 இந்திய மாவட்டங்களில், 133வது இடத்தில் உள்ளது[3] மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 288 நபர்கள் வாழ்கின்றனர்.[3] பாவ்நகர் மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 931 பெண்கள் எனும் விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி 2001-2011இல் 16.53 விழுக்காடாக குறைந்துள்ளது.[3] எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 76.84 விழுக்காடாக உள்ளது.[3]

தொழிலும் வணிகமும்

[தொகு]

பாவ்நகர் மாவட்டத்தில், வைரக்கற்களை பட்டை தீட்டுதல், மெருகூட்டுதல் மற்றும் விற்பனை செய்யும் தொழில், உப்பளத்தொழில், ”அலாங்” எனும் கடற்கரை நகரில், பயணத்திற்கு தகுதியற்ற கப்பல்கள் உலகின் பெரிய கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உடைத்த கப்பலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு 50 விழுக்காடு மீண்டும் பயன்படுத்தும் வசதி கொண்ட தொழிற்சாலைகள், உரம், சோடா உப்பு, இரும்பு வார்படத் தொழிற்சாலைகள் ஆகியன அதிகமாக உள்ளன. தங்கநகைகள் உற்பத்தி தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்களும் நைலான் கயிறு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

வேளாண்மை

[தொகு]

முதன்மை பயிர்கள்: நிலக்கடலை, வெங்காயம், பருத்தி, சிறு தானியங்கள் மற்றும் மாதுளை பழம்.

பாவ்நகர் அரசர்கள்

[தொகு]
பெயர்/ பிறப்பு-இறப்பு ஆண்ட காலம் பட்டம்
இரத்தன்சிங்ஜி (இறப்பு. 1703) II 1660–1703 தாக்கூர் சாகிப்
பவ்சிங்ஜி I இரத்தன்சிங்ஜி (1683–1764) 1703–1764 தாக்கூர் சாகிப்
அகேராஜ்ஜி II பவ்சிங்ஜி (1714–1772) 1764–1772 தாக்கூர் சாகிப்
வாக்கேட்சிங்ஜி அகேராசிங்ஜி (1748–1816) 1772–1816 தாக்கூர் சாகிப்
வாக்கேட்சிங்ஜிi (1780–1852) 1816–1852 தாக்கூர் சாகிப்
அகேராசிங்ஜி III பவ்சிங்ஜி (1817–1854) 1852–1854 தாக்கூர் சாகிப்
ஜஸ்வந்த்சிங்ஜி பவ்சிங்சிஜி (1827–1870) 1854 – 11 ஏப்ரல் 1870 தாக்கூர் சாகிப்
தக்காட்சிங்ஜி ஜஸ்வந்த்சிங்ஜி (1858–1896) 11 ஏப்ரல் 1870 – 29 சனவரி 1896 தாக்கூர் சாகிப்
பவ்சிங்ஜி II டக்காட்சிங்ஜி (1875–1919) 29 சனவரி 1896 – 1 சனவரி 1918 தாக்கூர் சாகிப்
1 சனவரி 1918 – 17 சூலை 1919 மகாராஜாராவ்
கிருஷ்ணகுமார்சிங்ஜி பவ்சிங்ஜி (1912–1965) 17 சூலை 1919 – 15 ஆகஸ்டு 1947 மகாராஜாராவ்

பாவ்நகர் சமசுதானத்தை சுதந்திர இந்திய அரசுடன் இணைத்தல்

[தொகு]

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெரும்வரை, பாவ்நகர் சமஸ்தானம் இராசபுத்திர கோஹில் குல மன்னர்கள் ஆண்டனர். விடுதலைப் பெற்ற இந்தியாவின் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆன சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பெருமுயற்சியால் 1948ஆம் ஆண்டில் பாவ்நகர் உட்பட இந்தியாவில் இருந்த 565 சுதேச சமசுதானங்கள் இந்திய அரசுடன் இணைக்கட்டது.

வரலாறு

[தொகு]

கோஹில் வமிசம் Gohil Dynasty பாவ்நகர் வரலாற்றுப் பட்டியல் Historical Vignettes பரணிடப்பட்டது 2011-02-05 at the வந்தவழி இயந்திரம்

  • படக்காட்சிகளும் ஓளிக்காட்சிகளும்:

நகரின் பறவைப்பார்வை படம் Bird's Eye View of the city பரணிடப்பட்டது 2009-10-04 at the வந்தவழி இயந்திரம் நகரின் பழங்கால படங்களும், சித்திரங்களும் Some old pictures/paintings of the city ஒளிக்காட்சிகள் Bhavnagar Ship Scrap Market, video 9:48 min

மற்ற செய்திகள்

[தொகு]

பாவ்நகர் மாவட்ட அறக்கட்டளைகள் Information about charitable as well as non-profit organizations in Bhavnagar – www.bhavnagar.org பரணிடப்பட்டது 2011-06-25 at the வந்தவழி இயந்திரம் பாவ்நகர் மாவட்ட செய்திக் குறிப்புகள் Bhavnagar Information பரணிடப்பட்டது 2009-11-25 at the வந்தவழி இயந்திரம் குடிநீர் வழங்கல் Accuweather.com Bhavnagar


குறிப்புதவிகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
  2. பவநகர் மாவட்ட இணயதளம்
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவநகர்_மாவட்டம்&oldid=3890655" இலிருந்து மீள்விக்கப்பட்டது