உள்ளடக்கத்துக்குச் செல்

சர்தார் சரோவர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் சரோவார் அணை
சர்தார் சரோவார் அணை,
2008 ஆகத்தில் நிரம்பியபோது
சர்தார் சரோவர் அணை is located in குசராத்து
சர்தார் சரோவர் அணை
Location of சர்தார் சரோவார் அணை in குசராத்து
நாடுஇந்தியா
நிலைசெயல்பாட்டில் உள்ளது
உரிமையாளர்(கள்)நர்மதா கண்ட்ரோல் அதாரிட்டி
அணையும் வழிகாலும்
வழிகால் அளவு84,949 m3/s (2,999,900 cu ft/s)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட்
பணியமர்த்தம்2006 சூன்
இணையதளம்
http://www.sardarsarovardam.org/

சர்தார் சரோவர் அணை(Sardar Sarovar Dam) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை கெவாடியா அருகே உள்ள நவகம் என்ற இடத்தின் அருகில் உள்ளது. இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ (535 அடி) ஆகும்.[1] நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணைதான் (SSD) மிகப்பெரியது ஆகும்.[2] நீர் அழுத்த பொறியியல் திட்டத்தின் கீழ் இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1979 இல் வடிவம் பெற்று 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அணை உலகின் பெரிய அணையான அமெரிக்காவின் கிரான்ட் அணைக்கு அடுத்து இரண்டாவது பெரிய அணை என்ற பெயரைப் பெற்றுள்ளது. மேலும் இது இந்தியாவின் மிகப்பெரிய இந்த அணையாகும். இந்த அணையானது 88 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இது மத்தியபிரதேசம், குஜராத் மாநிலங்களில் சுமார் 214 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளது. அணையின் அதிகபட்ச அகலம் 16.10 கி.மீ. குறைந்தபட்ச அகலம் 1.77 மீட்டர் கொண்டதாகும். கடந்த 1961 அடிக்கல் நாட்டப்பட்ட அணைத் திட்டம் சுமார் ரூ. 40,000 கோடி செலவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு 2017 ஆண்டு தற்போது முழுமை அடைந்தது.

அணையின் மூலம் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் 18 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 150-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும், 9000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், எல்லையில் பணியாற்றும் பி.எஸ்.எப். வீரர்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சர்தார் சரோவர் அணையின் நதிப் படுகையில் 1200 மெகாவாட் மின் நிலையமும், கால்வாய் பகுதியில் 250 மெகாவாட் மின் நிலையமும் அமைந்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 57 சதவீதம் மகாராஷ்டிராவுக்கும் 27 சதவீதம் மத்திய பிரதேசத்துக்கும் 16 சதவீதம் குஜராத்துக்கும் விநியோகிக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

1961 ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் சவகர்லால் நேரு, நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்ட அனுமதி அளித்தார். 1979 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1987 இல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு உதவ முன்வந்த உலக வங்கி திட்டத்துக்கு வந்த எதிர்ப்பைக் கண்டு திடீரென நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது. இதனிடையே அணை திட்டத்தால் மத்திய பிரதேச, குஜராத் விவசாயிகள், பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நர்மதா பச்சாவோ அந்தோலன் (நர்மதை ஆறு பாதுகாப்பு அமைப்பு) இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 1996 இல் அணை கட்டுமானப் பணிக்கு தடை விதித்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு அக்டோபரில் சில கட்டுப்பாடுகளை விதித்து தடை உத்தரவை நீக்கியது. இந்த அணையினால் மூழ்கப்போகும் கிராமங்களின் எண்ணிக்கை குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் என மூன்று மாநிலங்களையும் சேர்த்து சுமார் 244 கிராமங்கள் ஆகும்.[3] 2017 மே 27 இல் அரசு வெளியிட்ட அரசிதழ் அறிக்கையில் வெளியான தகவலின்படி. 18,346 குடும்பங்கள் இந்த அணை திட்டத்துக்காகச் சொந்தக் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டன என்று குறிப்பிடுகிறது. ஆனால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு இருக்கலாம் என மேதா பட்கர் கூறுகின்றார்.[4]

இதன்பிறகு 2006 ஆம் ஆண்டில் அணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அணையின் உயரம் 121.92 மீட்டராக இருந்தது. பின்னர் அந்த அணையின் உயரத்தை 138.68 மீட்டராக உயர்த்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2017 செப்டம்பர் 17 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[5]

சுற்றுலாத் தலங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sardar Sarovar Power Complex". Narmada Control Authority. Archived from the original on 30 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://www.narmada.org/sardarsarovar.html
  3. ந.வினோத்குமார் (21 செப்டம்பர் 2017). "நர்மதை அணைத் திட்டம்: அர்ப்பணிப்பா, அபகரிப்பா?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. மேதா பட்கர் (18 சூலை 2017). "அணையில் மூழ்கிய வாழ்க்கை". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி: பொறியியல் தொழில்நுட்ப அதிசயம் என பாராட்டு". செய்தி. தி இந்து. 18 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தார்_சரோவர்_அணை&oldid=3929635" இலிருந்து மீள்விக்கப்பட்டது