பாலிதானா கோயில்கள்
சத்ருஞ்ஜெய மலை கோயில்கள் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சத்ருஞ்ஜெய மலை, பாலிதானா, பவநகர் மாவட்டம், குஜராத் |
புவியியல் ஆள்கூறுகள் | 21°28′58.8″N 71°47′38.4″E / 21.483000°N 71.794000°E |
சமயம் | சமணம் |
சத்ருஞ்ஜெய மலை கோயில்கள் அல்லது பாலிதானா கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பவநகர் மாவட்டத்தில், பாலிதானா நகரத்தின் அருகில் உள்ள சத்ருஞ்ஜெய மலையில் அமைந்த சுவேதாம்பர சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 863 கோயில்களின் தொகுப்பாகும். சத்ருஞ்ஜெய மலைக்கு நேமிநாதர் தவிர மற்ற அனைத்து சமணத் தீர்த்தங்கரர்கள் வருகை புரிந்துள்ளனர். இங்குள்ள கோயில் தொகுதிகளின் முதன்மையான கோயில், சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிசபநாதருக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.
3000 படிக்கட்டுகளைக் கடந்து ரிசபநாதரின் முதன்மைக் கோயிலை அடைய வேண்டும். இக்கோயில்களின் தொகுதி, சமணர்களின் ஐந்து முக்கியத் புண்ணியத் தலங்களில் முதன்மையானதாகும். [1][2]
சமணர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சத்ருந்ஜெய மலைக் கோயில் தொகுதிகளை கண்டு தரிசனம் செய்வதன் மூலம் மோட்சம் கிட்டும் என கருதுகின்றனர்.[3]
ஹிங்குலாஜ் மாதா, சத்ருஞ் ஜெய மலையில் உள்ள 863 சமணக் கோயில்களின் காவல் தெய்வம் ஆகும்.
படக்காட்சிகள்
[தொகு]-
ஆதிநாதர் கோயில்
-
சத்ருஞ்ஜெய மலை கோயில்களின் வளாகம்
-
அன்னை பத்மாவதியின் கோயில்
-
பாலிதானா கோயில்களின் தொகுதி
-
பாலிதானா கோயில்களின் தொகுதி
-
-
கோயிலின் காணொளிகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- சத்ருஞ்ஜெய மலை
- தில்வாரா சமணர் கோயில்
- தரங்கா சமணர் கோயில்கள்
- கிர்நார் சமணர் கோயில்கள்
- ராணக்பூர் சமணர் கோயில்கள்
- சிதறால் மலைக் கோவில்
- மேல் சித்தாமூர் சமணர் கோயில்
- மிர்பூர் சமணக் கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Murtipujakas, Jainism", Encyclopedia of World Religions (PHILTAR), University of Cambria". Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2017-10-15.
- ↑ John E. Cort, Framing the Jina: Narratives of Icons and Idols in Jain History, p.120. Oxford University Press (2010). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-538502-0
- ↑ Melton, J. Gordon (13 September 2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations. ABC-CLIO. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-205-0. பார்க்கப்பட்ட நாள் 21 December 2012.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Deshpande, Aruna (2005). India:Divine Destination. Crest Lublishing House. pp. 418–419. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-242-0556-6.
{{cite book}}
:|work=
ignored (help)
- John E. Cort, Framing the Jina: Narratives of Icons and Idols in Jain History, Oxford U Press (2010). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-538502-0
வெளி இணைப்புகள்
[தொகு]- Article: Mount Śatruñjaya on JainPedia பரணிடப்பட்டது 2017-10-20 at the வந்தவழி இயந்திரம்
- SHATRUNJAY TIRTH