காந்திநகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

காந்திநகர் மாவட்டம் (Gandhinagar District) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வருவாய் மாவட்டம். காந்திநகர் 1964 முதல் குஜராத் மாநில தலைநகராகவும் அமைந்துள்ளது.

இதன் பரப்பளவு 649 km² ஆகும்.[1]

உட்பிரிவுகள்[தொகு]

காந்திநகர், சந்த்கேதா , அடாலாஜி, மொடெரா, போன்ற நகர்புறப் பகுதிகளும், காந்திநகர், கலோல் தாகேகாம், மான்சா என நான்கு வருவாய் வட்டங்களும், 216 கிராமங்களும் கொண்டுள்ளது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

வடகிழக்கே சபர்கந்தா, ஆராவல்லி மாவாட்டங்களும், தென்கிழக்கே கேடா மாட்டமும், தென்மேற்கே அகமதாபாத் மாவட்டமும், வடமேற்கே மேசானா மாவட்டமும் எல்லைகளாக கொண்டுள்ளது காந்திநகர் மாவட்டம்.

மக்கட்தொகை[தொகு]

2011ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 13,87,478 மக்கட்தொகை கொண்ட்து.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm
  2. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திநகர்_மாவட்டம்&oldid=1832474" இருந்து மீள்விக்கப்பட்டது