உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ருஞ்ஜெய மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2500 படிக்கட்டுகள் கொண்ட சத்துருஞ்செய மலை, பாலிதானா, குஜராத்

சத்ருஞ்ஜெய மலை (Shatrunjaya) (மனதின் எதிரிகளை வென்ற இடம்) [1] பண்டைய வரலாற்றில் இம்மலையின் பெயர் புண்டரீக மலை என்பதாகும். சத்ருஞ்ஜெய மலை, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டதின் பாலிதானா நகரத்தில், 580 மீட்டர் உயரத்தில், 2500 படிக்கட்டுகள் கொண்ட சமணர்களின் முக்கியமான புனிதத் தலங்களில் முதன்மையான, 863 சமணக் கோயில்களின் தொகுதி உள்ளது .[2]

சத்ருஞ்ஜெய மலையில் சமணர்களின் நூற்றுக் கணக்கான பாலிதானா கோயில்கள் அமைந்துள்ளது.[3]சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரான ரிசபதேவர் இம்மலை மீது முதன் முதலில் சமயப் பரப்புரையை மேற்கொண்டார். [4]

தீர்த்தங்கரரின் கணாதரர் எனப்படும் தலைமை மாணவரான புண்டரீக சுவாமி என்பவரின் பெயரால் இம்மலை புண்டரீக மலை அழைக்கப்பட்டது என பண்டைய வரலாறு கூறுகிறது.[5][6]இம்மலையில் பல தீர்த்தங்கரர்களுக்கு அறிவொளி கிடைத்ததால், இம்மலையை சித்த சேத்திரம், சித்தாலயம், முக்தி நிலையம் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. [7] மேலும் இம்மலையில் ரிசபதேவரின் பேரன் முக்தி அடைந்ததாக சமணர் கருதுகின்றனர். இவரது சன்னதி ரிசபதேவரின் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.[8][9]

புவியியல்[தொகு]

சத்துருஞ்ஜெய மலையின் தெற்கில் காம்பத் வளைகுடாவும், வடக்கில் பவநகரும் அமைந்துள்ளது. மலைக்கிடையே ஒரு ஆறும் பாய்கிறது.[10]இம்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாலிதானா நகரம் பவநகரிலிருந்து 56 கி மீ தொலைவில் உள்ளது. இப்பகுதி வறட்சி மிக்கதாகும். [1]

சத்ருஞ்ஜெய மலையின் சமணக் கோயில்களின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Arnett, Robert (15 July 2006). India Unveiled. Atman Press. pp. 164–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9652900-4-3. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
  2. John Cort (21 January 2010). Framing the Jina:Narratives of Icons and Idols in Jain History: Narratives of Icons and Idols in Jain History. Oxford University Press. pp. 120–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-538502-1. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
  3. Melton, J. Gordon (13 September 2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations. ABC-CLIO. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-205-0. பார்க்கப்பட்ட நாள் 21 December 2012.
  4. "Pilgrims flock Palitana for Kartik Poornima yatra". The Hindu. 2 November 2009 இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025064717/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-02/rajkot/28091395_1_devotees-palitana-jain. பார்த்த நாள்: 20 December 2012. 
  5. "Jain Festivals - Chaitra Purnima" (PDF). Jain University. Archived from the original (PDF) on 16 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 10 January 2013.
  6. Gopal, Krishna; Girota, Phal S. (2003). Fairs and Festivals of India: Chhattisgarh, Dadra and Nagar Haveli, Daman and Diu, Goa, Gujarat, Madhya Pradesh, Maharashtra. Gyan Publishing House. p. 172. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
  7. Deshpande 2005, ப. 418–419.
  8. Dr Linda Kay Davidson; David Martin Gitlitz (1 November 2002). Pilgrimage: From the Ganges to Graceland : An Encyclopedia. ABC-CLIO. pp. 419–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-004-8. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
  9. "Glistening spires of Palitana temples". The Hindu. 4 April 2004 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040923132241/http://www.hindu.com/thehindu/fr/2004/06/04/stories/2004060402020600.htm. பார்த்த நாள்: 20 December 2012. 
  10. Rough Guides (20 January 2011). The Rough Guide to India. Penguin. pp. 1216–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4053-8849-8. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ருஞ்ஜெய_மலை&oldid=3552790" இலிருந்து மீள்விக்கப்பட்டது