ஆரவல்லி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரவல்லி மாவட்டம்
અરવલ્લી જીલ્લો
மாவட்டம்
தலைமையிடம்மோதசா
பெயர்ச்சூட்டுஆரவல்லி மலைத்தொடர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,08,797
இணையதளம்https://arvalli.nic.in
15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

ஆரவல்லி மாவட்டம் (Aravalli district), (குசராத்தி: અરવલ્લી જીલ્લો) இந்தியாவின் குஜராத் 33 மாவட்டங்களில் ஒன்று. இது குஜராத்தின் கிழக்குப் பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் மோதசா ஆகும். இம்மாவட்டம், சபர்கந்தா மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டு, 15 ஆகஸ்டு 2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்டது. இம்மாவட்ட தலைமையிடம் மோதசா நகரம். [2] இம்மாவட்டத்தில் கிருஷ்ணருக்கு அமைந்த ஷாம்ளாஜி கோயில் உள்ளது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

676 கிராமங்கள் கொண்ட ஆரவல்லி மாவட்டத்தில் 6 வருவாய் வட்டங்கள் உள்ளது.

  1. மோதசா வட்டம்
  2. மால்பூர் வட்டம்
  3. தான்சூரா வட்டம்
  4. மெக்ராஜ் வட்டம்
  5. பிலோதா வட்டம்
  6. பயத் வட்டம்

ஆரவல்லி மலைத் தொடர்[தொகு]

ஆரவல்லி மலைத்தொடரின் 5653 அடி (1723 மீட்டர்) உயரமான சிகரம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

5 மெகா வாட் திறன் கொண்ட தனியார் சூரிய ஒளி மின்சக்தி ஆலை கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரவல்லி_மாவட்டம்&oldid=3518908" இருந்து மீள்விக்கப்பட்டது