அமுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமுல் (Anand Milk Producers Union Iimited (AMUL)என்பது இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும்.

இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 2.8 மில்லியன் பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய ஜி.சி.எம்.எம்.எப். எனப்படும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது. அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் "விலை மதிப்பற்றது" என்பது பொருளாகும்

வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.


அமுலின் வெற்றியைத் தொடர்ந்து இதே மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமுலை முன்மாதிரியாகக் கொண்டது ஆகும்.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சங்கம்[தொகு]

இந்நிறுவனம் உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் ஒரு முன்ணனி நிறுவனமாகும். இச்சங்கத்தின் மூலமாக ஒரே நாளில் 75 லட்சம் லிட்டர் பாலனது வெவ்வெறு 13141 கிராமங்களைச் சேர்ந்த 28 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது. கடந்த 2008-09 நிதி ஆண்டில் அமுல் நிறுவனத்தின் நிகர வருமானம் Indian Rupee symbol.svg 6711 கோடி ஆகும். அமுல் நிறுவனம் ISO 9001- 2000 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும்.

சங்கத்தின் உட்பிரிவுகள்[தொகு]

  1. கிராம பால் கூட்டுறவுச் சங்கம்
  2. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
  3. மாநில கூட்டுறவு பால் விற்பனைச் சங்கம்

இந்த 3 சங்கங்களிலும் உள்ள உறுப்பினர்களிடம் இருந்து, பெறப்படும் பாலின் மூலமாக, உருவாகப்படும் பொருட்கள் அமுல் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

பிற குறிப்புகள்[தொகு]

மேலும் இந்நிறுவனத்தின் மூலமாக நாளொன்றுக்கு Indian Rupee symbol.svg 15 கோடியானது கையாளப்படுகிறது. நாட்டின் பால் உற்பத்தியில் அமுல் நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பால் பொருட்கள் 37 நாடுகளுக்கு இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணி வருவாயும் அதிகரிக்கிறது.

விற்பனை பொருட்கள்[தொகு]

பால் மூலம் உற்பத்தியாகக் கூடிய அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் அமுல் நிறுவனம் விற்பனை செய்கிறது. அவற்றுள் சில,

இவை அவற்றுள் சில, மேலும் அமுல் நிறுவனமானது ஊட்டச்சத்து பானமான “STAMINA” என்பதையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அமுல் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டு உள்ள சர்க்கரை சேர்க்கப்படாத புதிய வகை பனிக்கூழானது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு புதிய தயாரிப்பாகும். பால் வகைகள், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, ஐஸ் கிரீம், பால் பொடி, இனிப்பூட்டப்பட்ட சுண்டிய பால், இனிப்பு வகைகள், சாக்கலேட், குளிர் பானங்கள், அமுல் சக்தி, நியூட்ராமுல் ஆகியனவும் அமுலால் சந்தைப்படுத்தப்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுல்&oldid=1816069" இருந்து மீள்விக்கப்பட்டது