உள்ளடக்கத்துக்குச் செல்

திரிபுவன்தாஸ் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேல்
பிறப்பு(1903-10-22)22 அக்டோபர் 1903
ஆனந்த், ஆனந்த் மாவட்டம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு3 சூன் 1994(1994-06-03) (அகவை 90)
குஜராத், இந்தியா
பணிஇந்திய விடுதலை இயக்கம், அமுல், தேசிய பால் பண்ணை
விருதுகள்பத்ம பூசண் (1964)
ரமோன் மக்சேசே விருது (1963)
அமுல் கூட்டுறவு பால் பண்னையை நிறுவிய மும்மூர்த்திகள்:வர்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல் மற்றும் அரிசந்த் மேகா தலாயா

திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேல் (Tribhuvandas Kishibhai Patel) (22 அக்டோபர் 1903 – 3 சூன் 1994) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1946-இல் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (தற்போது அமுல்) மற்றும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தை நிறுவிய சமூக ஆர்வலர், கூட்டுறவாளர் மற்றும் இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார்.[1] a Gandhian,[1] இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு காரணமான மூவரில் இவரும் ஒருவராவார்.

இளமை வாழ்க்கை[தொகு]

தற்கால குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் 22 அக்டோபர் 1903-இல் பிறந்தார்.[1] இவர் காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி, இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு பெற்றவர்.

கூட்டுறவு இயக்கம்[தொகு]

சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் ஆலோசனைப் படி, 1940-ஆம் ஆண்டில், திரிபுவன்தாஸ் படேல், குஜராத்தின் கேதா மாவட்டத்த்தின் வேளாண் குடிமக்களிடம் இணைந்து பால் உற்பத்தி மேம்பாட்டுக்கான பனிகளில் கவனம் செலுத்தினார். 1946-இல் இவர் ஆனந்த் நகரத்தில் வர்கீஸ் குரியன் தலைமையில் அமுல் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை நிறுவினார்.[2]

பின்னர் இவர் வர்கீஸ் குரியனுடன் இணைந்து குஜரத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (Gujarat Cooperative Milk Marketing Federation) மற்றும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தை நிறுவினார். இதனால் இந்தியாவில் வெண்மைப் புரட்சி ஓங்கியது.

பெற்ற விருதுகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Amul remembers Tribhuvandas on his birth anniversary". Indian Cooperative. 23 October 2019. https://www.indiancooperative.com/co-op-news-snippets/amul-remembers-tribhuvandas-on-his-birth-anniversary/. 
  2. Amul : Evolution of Marketing Strategy Marketing Case Studies
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுவன்தாஸ்_படேல்&oldid=3714751" இலிருந்து மீள்விக்கப்பட்டது