ஆனந்து மாவட்டம்
(ஆனந்த் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
ஆனந்த் மாவட்டம், (Anand district) இந்திய மாநிலமாகிய குஜராத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் ஆனந்த். இங்கு இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.[1] இதன் பரப்பளவு 4,690 சதுர கி.மீ. இங்கு வாழும் மக்கள் குஜராத்தி மொழியில் பேசுகின்றனர். இவர்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விட அதிகம். அமுல் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் கூட்டுறவு இணையம் இங்கு செயல்படுகிறது.
வட்டங்கள்[தொகு]
இது எட்டு வட்டங்களைக் கொண்டது.
- ஆனந்து
- ஆங்கலாவா
- உமரேட்
- கம்பாத்
- தாராபுர்
- பேடலாத்
- போரசத்
- சோஜித்ரா
சுற்றுலா[தொகு]
- ஆனந்து - பால் பண்ணை
- ஆனந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம்
- கம்பாத் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.