உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரேலி மாவட்டம்

ஆள்கூறுகள்: 20°52′N 70°45′E / 20.867°N 70.750°E / 20.867; 70.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
અમરેલી જિલ્લો
மாவட்டம்
குஜராத் மாநில புதிய வரைபடம்
குஜராத் மாநில புதிய வரைபடம்
மாநிலம்குசராத்து
மாவட்டத் தலைநகர்அம்ரேலி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்15,13,614
 • கோடை (பசேநே)IST (UTC+05:30)

அம்ரேலி மாவட்டம் (குசராத்தி: અમરેલી જિલ્લો) குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராட்டிர தேசத்தில், குசராத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகரம் அம்ரேலி நகராகும்.

மாவட்டத்தின் விவரம்

[தொகு]

இம்மாவட்டம் மிகவும் வறட்சியான பகுதியாகும். எனவே இம்மாவட்ட மக்கள் பலர் வெளிநாடுவாழ் இந்தியர்களாக உள்ளனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் இம்மாவட்டத்தினர் அதிகமாக காணப்படுகின்றனர். கல்வித்துறையில் இம்மாவட்டம் குசராத்தின் ஒரு மையப்பகுதியாக உள்ளது.[1]

பெயர்க் காரணம்

[தொகு]

அம்ரேலி மாவட்டம், அதன் தலைநகரான அம்ரேலி நகரத்தின் பெயரில் அழைக்கப்படுகிறது. கி. மு., 534ஆம் ஆண்டில் அம்ரேலி நகரம் `அனுமான்ஜி` எனும் பெயரில் அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்பு இப்பெயர் `அம்லிக்` என்று மருவி அழைக்கப்பட்டது. காலப்போக்கில் `அம்லிக்` எனும் இவ்வூர் `அம்ரவல்லி` என்றும் பிறகு அமராவதி என்று அழைக்கப்பட்டது. பண்டைய சமசுகிருத மொழியில் அம்ரேலி நகர் `அமராவதி` எனும் பெயரால் அழைக்கப்பட்டது.

மாவட்டப் பொருளாதாரம்

[தொகு]

தொழில்துறையை பொருத்த வரை அம்ரேலி மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது, வைரங்களை பட்டை தீட்டுதல் மற்றும் மெருகூட்டுதல், சமையல் எண்ணெய் உற்பத்தி செய்வது இம்மாவட்டம் முழுவதும் உள்ள சிறுதொழில்கள் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் எடைகாட்டும் தராசுகள் குசராத்து முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. போதுமான மழை இல்லாத காரணத்தால் வேளாண்மைத் தொழில் சிறிதளவே நடைபெறுகிறது. மீன்பிடித்தல் தொழில் சிறப்பாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களான பிபாவ், ஜாபர்பாத் மற்றும் விக்டர் போன்ற மீன்பிடி துறைமுகங்கள் மீன் சந்தைக்கு பெரிதும் துணைபுரிகிறது. வேளாண்மை சார்ந்த இதர தொழில்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெருந்தொழில் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவைகள்.

  • அல்ட்ரா டெக் சிமிண்ட் தொழிற்சாலை, ராஜீலா
  • நர்மதா சிமிண்ட் தொழிற்சாலை, ஜாபர்பாத்
  • மெடாடிஸ்ட் நிறுவனம், ராஜீலா
  • தரம்ஷி மொரார்ஜி வேதியல் தொழிற்சாலைகள்
  • ஜி எச் சி நிறுவனம்

வருவாய் வட்டங்கள்

[தொகு]

இம்மாவட்டம் 11 வருவாய் வட்டங்கள் கொண்டுள்ளது. பெயர்கள் பின்வருமாறு.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம்

[தொகு]

2011ஆம் ஆண்டில் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 15,13,614ஆக இருந்த்து.[2] மக்கள் தொகைப்படி இம்மாவட்டம், இந்தியாவின் 640 மாவட்டங்களில் இம்மாவட்டம் 329 ஆவது இடத்தில் உள்ளது..[2] மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டரில் 205 நபர்கள் வசிக்கின்றனர். 2001-2011 முடிய உள்ள பத்தாண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.59 விழுக்காடு கூடியுள்ளது.[2]. மக்களின் கல்வி அறிவு 74.49 விழுக்காடாக உள்ளது. [2]. ஆண்-பெண் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் உள்ளனர். {{convert| [2] Its

பார்க்க வேண்டிய இடங்கள்

[தொகு]
  • நாகநாதர் கோயில், அம்ரேலி நகரம்
  • காயத்திரி கோயில் மற்றும் ஸ்ரீநாத் கோயில், ஹவேலி
  • கலாதர - கொடியார் கோயில்
  • கொடியார் நீர்த்தேக்கம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census GIS India". Archived from the original on 2007-07-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-27.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரேலி_மாவட்டம்&oldid=4015122" இலிருந்து மீள்விக்கப்பட்டது