உள்ளடக்கத்துக்குச் செல்

சோட்டா உதய்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜராத் மாநிலத்தின் மாவட்டங்கள்

சோட்டா உதய்பூர் மாவட்டம் (Chhota Udaipur district) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. 15 ஆகஸ்டு 2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களில் இதுவம் ஒன்றாகும். [1]. சோட்டா உதய்பூர் மாவட்டம் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் சோட்டா உதய்பூர் நகராகும். [2]. வதோதரா மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் உருவானது. [3]

வருவாய் வட்டங்கள்

[தொகு]

3436 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சோட்டா உதய்பூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களையும் [4], 6 ஊராட்சி ஒன்றியங்களையும், 894 கிராமங்களையும், சோட்டா உதய்பூர் என்ற ஒரு நகராட்சியும் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்[5]:

 1. சோட்டா உதய்பூர்
 2. பவி ஜெட்பூர்
 3. கவந்த்
 4. நஸ்வாடி
 5. சங்கேடா
 6. பொதிலி

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 10.70 இலட்சம் ஆகும். ச்ராசரி எழுத்தறிவு 65.20% ஆகும்.

பொருளாதாரம்

[தொகு]

இம்மாவட்டம் 75,704 ஹெக்டேர் காட்டுப்பரப்பு கொண்டுள்ளது. பெரிய பால் பண்ணை தொழிற்சாலைகள் மற்றும் கனிம வளம் கொண்டது.[6]

மாவட்ட எல்லைகள்

[தொகு]

இம்மாவட்டத்தின் கிழக்கே மத்தியப்பிரதேசமும், தெற்கிலும், தென்கிழக்கிலும் நர்மதா மாவட்டம், வடக்கே பஞ்சமகால் மாவட்டம் மற்றும் தகோத் மாவட்டம், கிழக்கே வதோதரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Modi Announces Creation of New District". Outlook. September 10, 2012 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105102113/http://news.outlookindia.com/items.aspx?artid=774814. பார்த்த நாள்: 23 February 2013. 
 2. "Bandh to protest Chhota Udepur as headquarters peaceful". The Indian Express. 17 August 2013. http://www.indianexpress.com/news/bandh-to-protest-chhota-udepur-as-headquarters-peaceful/1156434/. பார்த்த நாள்: 20 September 2013. 
 3. சோட்டா நாக்பூர் மாவட்ட இணையதளம்
 4. "Process to set up Chhota Udepur district begins". Times of India. 9 February 2013 இம் மூலத்தில் இருந்து 21 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921053313/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-09/vadodara/37007250_1_chhota-udepur-new-taluka-new-district. பார்த்த நாள்: 23 February 2013. 
 5. சோட்டா உதய்பூர் மாவட்ட இணையதளம்
 6. http://www.indianexpress.com/news/rich-in-mineral-resources-chhota-udepur-set-to-become-highest-revenueearning-district/1162154/0%7Caccessdate=20 September 2013|newspaper=The Indian Express|date=30 August 2013}}

வெளி இணைப்புகள்

[தொகு]