மெக்சனா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடக்கு குஜராத்தில் மெகசானா மாவட்டம்

மெகசானா மாவட்டம் அல்லது மகிசானா மாவட்டம் (Mehsana district) or (Mahesana district) (குஜராத்தி: મહેસાણા જિલ્લો) மேற்கிந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்ட தலைமயகம் மெகசானா நகரம். மாவட்ட மக்கட்தொகை 18,37,892. பரப்பளவு 4500 சதுர கி. மீ., 600 கிராமங்களைக் கொண்டது. மோட்டார் வண்டி பதிவு எண் GJ-2. இம்மாவட்ட தலைமையகமான மகிசனா நகரத்தில் கலைநயமிக்க கட்டிட அமைப்புகளுடன் சூரியன் கோயில் அமைந்துள்ளது. [1]. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய தூத்சாகர் கூட்டுறவு பால் பண்னை இங்கு செயல்படுகிறது.

அமைவிடம்[தொகு]

வடக்கே பனஸ்கந்தா மாவட்டம், மேற்கே பதான் மாவட்டம் மற்றும் சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே காந்திநகர் மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டம், கிழக்கே சபர்கந்தா மாவட்டம் எல்லகைகளாக கொண்டது மகிசனா மாவட்டம்.

பார்க்கவேண்டிய இடங்கள்[தொகு]

முக்கிய நகரங்கள்[தொகு]

  1. வாட்நகர்
  2. கெராலு
  3. விஜாபூர்
  4. பகுசராஜி
  5. மொதெரா
  6. உஞ்சா
  7. வாத்நகர்
  8. கடி
  9. விஸ்நகர்
  10. கேர்வா
  11. கலோல் (மெசனா)
  12. ஜோட்னா
  13. காதல்பூர்
  14. சங்கன்பூர்

வரலாறு[தொகு]

சிந்து வெளி நாகரிக காலம்[தொகு]

சிந்துவெளி நாகரிகத்தின் ஒரு முக்கிய இடமான லோதேஸ்வர் (Loteshwar) இம்மாவட்டத்தில் உள்ளது.[2]

பிந்தைய வரலாறு[தொகு]

இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 1964இல் காந்திநகர் மாவட்டமும் பின் 2000இல் பதான் மாவட்டமும் உருவானது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

இம்மாவட்டம் 11 வருவாய் வட்டங்களைக் கொண்டது.

  1. மெஹசானா
  2. பெஜரஜி
  3. கடி
  4. கேரலு
  5. வாத்நகர்
  6. விஜாபூர்
  7. விஸ்நகர்
  8. சட்லாசனா
  9. ஜோடானா
  10. கொசாரியா
  11. உஞ்சா

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1. கேரலு. 2 உஞ்சா 3 விஸ்நகர். 4 பெஜரஜி. 5 கடி. 6 மெகசானா 7 விஜாபூர்

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மை[தொகு]

சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

வணிகம்[தொகு]

மகிசனா மாவட்டத்தில், இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், 1200 எண்ணெய் கிணறுகளும், 23 எரிவாயு கிணறுகளும் கொண்டுள்ளது. ஆசியாவின் இரணாவது பால் பண்ணை தொழிற்சாலையான தூத் சாகர் என்ற நிறுவனம் மகிசனா நகரத்தில் செயல்படுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை 2,027,727ஆக உள்ளது.[3] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 462 நபர்கள் என்ற விகிதத்தில் உள்ளது. பாலினவிகிதம் 1000 வ்ஆண்களுக்கு 925 பெண்கள் என்ற அளவில் உள்ளது. எழுத்தறிவு 84.26% ஆக உள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

மெகசானா மாவட்டத்தில் அமைந்துள்ள சூரியன் கோயிலின் படங்கள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: IN_type: adm2nd_source: GNS-enwiki 23°40′N 72°30′E / 23.667°N 72.500°E / 23.667; 72.500

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சனா_மாவட்டம்&oldid=2755552" இருந்து மீள்விக்கப்பட்டது