உள்ளடக்கத்துக்குச் செல்

அப்சல் கான் (படைத்தலைவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஃப்சல் கான்
அப்சல் கானின் சித்திரம்
இறப்பு20 November 1659 (1659-11-21) (10 November in யூலியன் நாட்காட்டி)
பிரதாப்காட் கோட்டையின் அடிவாரம்
மற்ற பெயர்கள்Afzul Khan
பணிபடைத்தலைவர்

அஃப்சல் கான் (Afzal Khan) (இறப்பு:20 நவம்பர் 1659) இந்தியாவின் தக்காணப் பீடபூமியில் உள்ள பிஜப்பூர் சுல்தான் அடில் ஷாவின் 20,000 படைவீரர்களுக்கு தலைவராக இருந்தவர்.[1] தக்காண சுல்தான்கள், விஜயநகரப்பேரரசை வெற்றி கொள்வதற்கு அப்சல் கான் முக்கிய காரணமாக விளங்கியவர். பிஜப்பூர் சுல்தானகத்தின் சிற்றரசராக இருந்த சிவாஜி புனே பகுதிகளை தன்னாட்சியுடன் ஆளத்துவகினார். எனவே சிவாஜியை அடக்குவதற்கு, பிஜப்பூர் சுல்தான் அப்சால் கானை அனுப்பினார். சிவாஜியுடன் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ள வந்த அப்சால் கானை, சிவாஜி பிரதாப்காட் சண்டையில் கொன்றார்.[2]

சிவாஜியுடன் சந்திப்பும், கொல்லப்படலும்

[தொகு]
அப்சல் கானை சிவாஜி கொல்லும் சித்திரம், 1920
அப்சல் கானை கொன்ற சிவாஜியின் இரும்பில் ஆன புலி நக ஆயுதம்

பேச்சு வார்த்தைக்காக அப்சல் கானை சிவாஜி சந்திக்க, தனது ஆடைக்குள் கூரிய புலி நகத்தாலான ஆயுததத்தை மறைத்து கொண்டு, ஒரு வாளும் மற்றும் இரண்டு வாள் வீரர்களுடன் சென்றார்.[3] அப்சல் கான் தன்து கூடாரத்திலிருது 1,000 வீரர்கள் புடைசூழ சிவாஜியை சந்திக்க வெளிக்கிளம்பினார். சிவாஜியின் படைவீரர் கோபிநாத் என்பவர், அப்சல் கானை நோக்கி, அதிக படைவீரர்களுடன் சிவாஜியை சந்திக்க மறுத்தார். எனவே சிவாஜியைப் போன்றே அப்சல் கான் தனது இரண்டு படைவீரர்களின் துணையுடன் சிவாஜியை சந்திக்கும் கூடாரத்தை நோக்கிச் சென்றார்.

கூடாரத்தில் தனித்து இருந்த அப்சல் கானை சந்திக்கச் சென்ற சிவாஜியை நோக்கி, பிஜப்பூர் சுல்தானுக்கு அடங்கி, கப்பம் செலுத்த ஒப்புக் கொள்ளுமாறு கூறினார். சிவாஜி அப்சல் கானை தழுவிக் கொள்வது போல் நடித்து, ஆடையில் மறைத்து வைத்திருந்த இரும்பால் ஆன புலி நகம் போன்ற ஆயுத்தத்தால் அப்சல் கானை சிவாஜி தாக்கினார். [4] தாக்கப்பட்ட அப்சல் கான் கூடாரத்தை விட்டு வெளியேறிய போது, சிவாஜியை அப்சல் கானின் வீரர் சையத் பண்டா தாக்கினார். ஆனால் சையத் பண்டாவை சிவாஜியி வீரர் ஜீவ மகாலா தாக்கி அழித்தார்.[5] இந்த நிகழ்வு ஒரு மராத்தி மொழி பழமொழியான ஹோதா ஜிவா மஹானுன் வாச்லா சிவா ("ஜிவாவால்; சிவாஜி தாக்குதலில் இருந்து தப்பினார்") மூலம் நினைவுகூரப்படுகிறது.[6]பின்னர் சிவாஜி அப்சல் கானின் தலையை கொய்து கொன்றார்.[7]

மரபுரிமை பேறுகள்

[தொகு]
பிரதாப்காட் கோட்டையில் அப்சல் கானின் கல்லறை

அப்சல் கானில் தலையை அன்னை பவானிக்கு சிவாஜி பலி கொடுத்தார். பின் அவரது தலையும், உடலும் பிரதாப்காட் கோட்டையில் உள்ள அப்துல்லா மேட்டில் புதைத்தனர்.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Afzal Khan (Adilshahi General)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]