மாதவராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேஷ்வா
மாதவராவ் பேஷ்வா
மாதவராவ் வல்லாள பேஷ்வா (யேல் பிரித்தானியக் கலை மையம்)
மராட்டியப் பேரரசின் பேஷ்வா
பதவியில்
23 சூன் 1761 – 18 நவம்பர் 1772
அரசர் இராமராஜன்
முன்னவர் பாலாஜி பாஜி ராவ்
பின்வந்தவர் பேஷ்வா நாராயணராவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 14 பிப்ரவரி 1745
சௌனூர்
இறப்பு 18 நவம்பர் 1772 (27 வயதில்)
தேரூர்
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) இராமாபாய்
சமயம் இந்து

பேஷ்வா முதலாம் மாதவராவ் (Madhav Rao I) (பிறப்பு:1745 – இறப்பு: 1772) தமது பதினாறு வயதில், தன் தந்தை பாலாஜி பாஜி ராவின் மறைவிற்குப் பின், மராட்டியப் பேரரசின் நான்காம் பேஷ்வாவாக பதவி ஏற்றார். மூன்றாம் பானிபட் போரில் இழந்த பஞ்சாப் போன்ற மேற்கிந்திய பகுதிகளை மீண்டும் மராத்தியப் பேரரசில் இணைத்த பெருமை பேஷ்வா மாதவராவுக்கு உண்டு. மராத்திய வரலாற்றில், மராத்திய பேஷ்வாக்களில், மிகவும் பெருமைக்குரியவராக மாதவராவ் பேஷ்வா கருதப்படுகிறார்.

வரலாறு[தொகு]

பேஷ்வா மாதவராவின் நினைவிடம், புனே

இவர் மராத்திய பேஷ்வாவாக பதவி ஏற்ற காலத்தில், மூன்றாம் பானிபட் போரின் காரணமாக, மராத்தியப் பேரரசின் வருவாய் கடுமையாக குறைந்து, அரசின் கருவூலம் குன்றிப் போனது. 1762ல் மைசூர் அரசிற்கு எதிராகப் படை நடத்திச் சென்ற போது, இவருக்கும், இவரது சித்தப்பா இரகுநாதராவுக்கும் இடையே கருத்து மோதல்கள் உண்டாயின.

தனக்கு எதிராக சூன் 1768ல் தனது சித்தப்பா இரகுநாத ராவ் மேற்கொண்ட போரில், பேஷ்வா மாதவராவ், இரகுநாதராவை சிறைப் பிடித்து சனிவார் வாடாவில் வீட்டுக் காவலில் வைத்தார்.

தேரூரில் மறைந்த மாதவராவின் நினைவிடம்
பேஷ்வா மாதவராவின் வரலாற்றுக் குறிப்புகள், பேஷ்வா பூங்கா, புனே
பேஷ்வா மாதவராவின் வரலாற்றுக் குறிப்புகள், பேஷ்வா பூங்கா, புனே

கர்நாடகப் போர்[தொகு]

1767ல் மாதவராவ். மைசூர் மன்னர் ஐதர் அலி மீது படையெடுத்தார். போரில் ஐதர் அலியை வென்ற மாதவராவ் மைசூர் சிறையில் ஐதர் அலியால் அடைத்து வைக்கப்பட்டிருந்த கேளடி அரசின் பட்டத்து இராணியையும், இளவரசனையும் மீட்டார். [1] மேலும் அவர்களை புனே கோட்டையில் பாதுகாப்பாகத் தங்க வைத்தார். [1]

1770ல் மாதவராவ் மீண்டும் மூன்றாம் முறையாக மைசூர் மீது படையெடுத்து ஐதர் அலியை வென்றார்.

மறைவு[தொகு]

கடுமையான நுரையீரல் நோயால் மாதவராவ் உடல் நலிந்து, 18 நவம்பர் 1772ல் மரணமடைந்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Advanced Study in the History of Modern India 1707–1813 by Jaswant Lal Mehta p.458

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவராவ்&oldid=3565161" இருந்து மீள்விக்கப்பட்டது