தாதாஜி கொண்டதேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாதாஜி கொண்டதேவ்
பிறப்புதௌந்து, புனே மாவட்டம்
இறப்புபுனே பிஜப்பூர் சுல்தானகம், (தற்கால மகாராட்டிரா, இந்தியா)
பணிஜாகிர்தார்
அறியப்படுவதுபுனே ஜாகிர்தார்

தாதாஜி கொண்டதேவ் (Dadoji Kondadeo or Dadoji Konddev) தற்கால புனே மாவட்டத்தில் உள்ள தௌந்து நகரத்தில் பிறந்து, சிரூர் தாலுகாவில் வளர்ந்தவர்.[1] நன்கு வளர்ந்த பின் பிஜப்பூர் சுல்தானகத்தின் நிர்வாகத்தில் பணியமர்ந்து, படிப்படியாக உயர்ந்து 1637-இல் கொண்டன கோட்டையின் காவல் அதிகாரியானார். பேரரசர் சிவாஜியின் தந்தையான சாகாஜி போஸ்லே, தாதாஜி கொண்டதேவை புனே பகுதியின் ஜாகிர்தாராக நியமித்தார்.[2].[3][4]அப்போது சாகாஜி போஸ்லே பெங்களூர் பகுதியின் ஜாகிர்தாராக இருந்தார்.

கொண்டதேவ் மாவல் பகுதியை வென்று, உள்ளூர் தேஷ்பாண்டேக்களை (நிலக்கிழார்கள்) தனது கட்டுக்கள் கொண்டு வந்தார். புனே நகரத்தை சீரமைத்து, லால் அரண்மனையை கட்டினார். 1631-இல் பிஜப்பூர் சுல்தான் அடில் ஷாவின் ப்டைத்தலைவர்களால விரட்டியடிக்கப்பட்ட புனே நகரத்து பிரபல குடும்பங்களை மீண்டும் புனேவில் குடியமர்த்தினார்.[5]

சிவாஜியின் காப்பாளராக[தொகு]

சாகாஜி போஸ்லே சிறுவனாக இருந்த தனது மகன் சிவாஜியை சிவனேரி கோட்டையிலிருந்து புனேவிற்கு அனுப்பினார். ஜிஜாபாயின் கோரிக்கையின் படி, தாதாஜி கொண்டதேவ் சிவாஜியின் காப்பாளாராக விளங்கினார்.[6]

மரபுரிமைப் பேறுகள்[தொகு]

  • தாதாஜி கொண்டதேவ் நினைவாக மகாராட்டிரா மாநிலத்தின் தானே பகுதியில் தாதாஜி கொண்டதேவ் விளையாட்டரங்கம் ஒன்றை மகாராஷ்டிர அரசு நிறுவியுள்ளது.[7]
  • மகாராட்டிராவில் விளையாட்டு வீரர்களுக்கு நன்கு பயிற்சி வழங்குபவர்களுக்கு தாதாஜி கொண்டதேவ் நினைவு விருது ஆண்டுதோறும் மாநில அரசால் வழங்கப்படுகிறது.
  • மும்பை நகரத்தில் ஒரு சாலைக்கு தாதாஜி கொண்டதேவ் மார்க் என மும்பை மாநகராட்சி பெயரிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Daund - Info". Pune Diary. பார்த்த நாள் 25 November 2006.
  2. Gordon, Stewart (1993). The Marathas 1600-1818 (1. publ. ). New York: Cambridge University. பக். 51–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0521-26883-7. https://books.google.com/?id=iHK-BhVXOU4C&pg=PR9. 
  3. https://www.thefridaytimes.com/a-book-under-attack-in-india/
  4. Shivaram Laxman Karandikar (1969). The Rise and Fall of the Maratha Power, Volume 1. Sitabai Shivram Karandikar Publication. பக். 43. 
  5. Kantak, M. R. (1991–92). "Urbanization of Pune: How Its Ground Was Prepared". Bulletin of the Deccan College Research Institute 51/52: 489–495. 
  6. Organiser, Volume 50. Bharat Prakashan. 1999. பக். 67. "She entrusted the young Shivaji to the care of Dadoji Konddev who was to look after his all round development of him along with the martial training imparted by Dadoji, the two of them also unfolded before him" 
  7. "Dadoji Konddev Stadium". Thane City Government.

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதாஜி_கொண்டதேவ்&oldid=3036694" இருந்து மீள்விக்கப்பட்டது