முத்திரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முத்திரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முத்திரை
இயக்கம்ஸ்ரீநாத்
தயாரிப்புவிக்ரம் பட்
சுரேந்தர் சர்மா
அமிதா பிஸ்நொய்
பகவந்தி கப்ரானி
கதைஅனீஸ் தன்வீர் ஜீவா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புடேனியல் பாலாஜி
நிதின் சத்யா
லட்சுமி ராய்
மஞ்சரி பாட்னிஸ்
கிஷோர்
பொன்வண்ணன்
ஆனந்த்
சரவணன்
ஒளிப்பதிவுசலீம்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்ஏ.எஸ்.ஏ. புரொடக்சன்ஸ் & என்டர்ப்ரைசஸ் (பி) லிமிடெட்
விசன் ஜீவா ஸ்டுடியோஸ்
விநியோகம்ஏ.எஸ்.ஏ. புரொடக்சன்ஸ் & என்டர்ப்ரைசஸ் (பி) லிமிடெட்
வெளியீடுசூன் 19, 2009 (2009-06-19)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முத்திரை 2009 ஆம் ஆண்டு டேனியல் பாலாஜி, நிதின் சத்யா மற்றும் லட்சுமி ராய் நடிப்பில், அனீஸ் தன்வீர் ஜீவாவின் எழுத்தில், ஸ்ரீநாத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். அனீஸ் தன்வீர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி ஆவார். பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்[1][2].

கதைச்சுருக்கம்[தொகு]

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அழகர் அதியமானின் (சரவணன்) கட்சி வெற்றி பெறுகிறது. அவரது சகோதரன் அழகர் தொண்டைமான் (ஆனந்த்) மற்றும் மூத்த தலைவர் ஆதிகேசவன் (பொன்வண்ணன்) ஆகியோருக்கு பதவிக்காக நடைபெறும் வாக்குவாதம் பெரிதாகி துப்பாக்கிச்சூடு நடக்கிறது. அதில் அழகர் அதியமான் இறக்கிறார். அழகர் தொண்டைமான் கோமா நிலைக்குச் செல்கிறார். ஆதிகேசவன் படுகாயமடைகிறார். இதனால் முதல்வரைத் தேர்வு செய்யும் வரை மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.

சத்யா (நிதின் சத்யா) மற்றும் அழகு (டேனியல் பாலாஜி) இருவரும் திருடர்கள். அழகு பணத்திற்காக காவியஞ்சலியை (லட்சுமி ராய்) திருமணம் செய்கிறான். அதன்பிறகு தன் தவறை உணர்ந்து காவ்யாவை உண்மையாக நேசிக்கிறான். சத்யா தான் ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று பொய்சொல்லி ஆர்த்தியைக் (மஞ்சரி பாட்னிஸ்) காதலிக்கிறான். சத்யா மற்றும் அழகு தங்கியிருக்கும் அடுக்குமாடிக்குடியிருப்பில் உள்ள வீட்டின் எதிரே உள்ள வீட்டில் கிருஷ்ணா (சேத்தன்) தங்கியுள்ளான்.

அழகர் அதியமான் கொலை வழக்கை விசாரிக்கும் காவல் ஆணையர் (கிஷோர்) அந்த துப்பாக்கிச்சூடு பற்றிய ரகசியங்கள் அறிந்த நபரான கிருஷ்ணாவைத் தேடுகிறார். அவனுடைய வீட்டைக் கண்டுபிடித்து அங்கே வருவதை அறியும் கிருஷ்ணா அங்கிருந்து தப்பித்து, எதிரில் உள்ள சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து உதவுமாறு கேட்கிறான். அப்போது வீட்டில் சத்யாவுடன் அழகு, காவ்யா மற்றும் ஆர்த்தி ஆகியோர் உள்ளனர். அவர்கள் ஐந்து பேரும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். மகிழுந்தில் கிருஷ்ணாவைத் தவிர மற்ற நால்வரும் ஏறி தப்பிக்கின்றனர். வாகனத்தில் எற முயலும் கிருஷ்ணா தன் மடிக்கணினியை அந்த மகிழுந்தில் தவறவிடுகிறான்.

அந்த மடிக்கணினியில் உள்ள காணொளியைக் காணும் நால்வரும் அந்த துப்பாக்கிச்சூடு நடந்த அன்று ஆதிகேசவன் தான், அழகர் அதியமான் மற்றும் அழகர் தொண்டைமான் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டதையும் அறிகின்றனர். அழகு இதைக் காவல் ஆணையரிடம் தெரிவிக்கிறான். சிறிது நேரத்தில் ஆதிகேசவனின் ஆட்கள் அவர்களைத் தேடிவருகிறார்கள். அழகு காவல் ஆணையர்தான் அந்த ஆட்களை அனுப்பியதாக எண்ணுகிறான். எனவே ஆதிகேசவனிடம் அந்த மடிக்கணினியைக் கொடுக்க பணம் வேண்டுமென பேரம் பேசுகின்றனர். குற்றவாளி தண்டிக்கப்பட்டானா? சத்யா மற்றும் அழகு தப்பினார்களா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. 2009 மே 7 அன்று சத்யம் சினிமாஸ்- இல் நடைபெற்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கெளதம் மேனன் பாடல்களை வெளியிட்டார்[3][4]. படத்தின் நாயகிகளில் ஒருவரான மஞ்சரி பாட்னிஸ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், நா. முத்துக்குமார் மற்றும் பா. விஜய்[5].

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலநீளம் பாடல் காட்சியில் ஆடியவர்கள்
1 ஓம் சாந்தி ஓம் நேகா பாசின் நா. முத்துக்குமார் 4:44 லட்சுமி ராய்
2 அழகான நீயும் நரேஷ் ஐயர், மஞ்சரி பாட்னிஸ் சினேகன் 5:06 நிதின் சத்யா, மஞ்சரி பாட்னவீஸ்
3 நைட் இஸ் ஸ்டில் யங் கிரிஷ், பென்னி தயாள், ப்ரீத்தி பா. விஜய் 4:42 ராக்கி சாவந்த், நிதின் சத்யா மற்றும் டேனியல் பாலாஜி
4 ஜூலை மாதத்தில் முகமது அஸ்லம், ராகுல் நம்பியார், தன்வி ஷா, பிரியா நா. முத்துக்குமார் 4:21 நிதின் சத்யா, டேனியல் பாலாஜி, லட்சுமி ராய் மற்றும் மஞ்சரி பட்னவீஸ்
5 உயிரே உயிரே ஜாவித் அலி, மது ஸ்ரீ சினேகன் 5:08 டேனியல் பாலாஜி, லட்சுமி ராய்
6 நெஞ்சுக்குள்ள சுவேதா மேனன் சினேகன் 2:32 டேனியல் பாலாஜி, லட்சுமி ராய்
7 ஓம் சாந்தி ஓம் நேகா பாசின் நா. முத்துக்குமார் 5:11 ஆதித்யா மறுஆக்கம் செய்தது (திரைப்படத்தில் இடம்பெறவில்லை)
8 அழகான நீயும் கிரிஷ், பென்னி தயாள், ப்ரீத்தி பா. விஜய் 4:35 ஆதித்யா மறுஆக்கம் செய்தது (திரைப்படத்தில் இடம்பெறவில்லை)

விமர்சனம்[தொகு]

விகடன்: இப்படத்திற்கு விகடன் விமர்சனம் 100க்கு 38 மதிப்பெண் வழங்கியது[6].

ஈகரை.நெட் : இயக்குநர் மக்களிடமிருந்து வெற்றி முத்திரையை வாங்கத் தவறிவிட்டார்[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராக்கி சாவந்த்" இம் மூலத்தில் இருந்து 2008-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080826095417/http://entertainment.in.msn.com/southcinema/article.aspx?cp-documentid=1646392. 
  2. "முத்திரை" இம் மூலத்தில் இருந்து 2008-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080503120831/http://www.tamilnaduentertainment.com/tamil.asp?hotclick=muthirai.txt. 
  3. "பாடல் வெளியீடு". http://sify.com/movies/fullstory.php?id=14886312. 
  4. "முத்திரை பாடல் வெளியீடு" இம் மூலத்தில் இருந்து 2011-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110613204637/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/18249.html. 
  5. "பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2017-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170227012438/http://starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=68. 
  6. "முத்திரை விமர்சனம்". https://www.vikatan.com/anandavikatan/2009-jul-01/cinema-news/40983.html. 
  7. "முத்திரை விமர்சனம்". http://eegarai.darkbb.com/t2594-topic. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்திரை_(திரைப்படம்)&oldid=3680803" இருந்து மீள்விக்கப்பட்டது