உள்ளடக்கத்துக்குச் செல்

ஹேருகர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமாந்தக வஜ்ஜ்ஜிரபைரவர் உலோகச் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம்

ஹேருகர் என்பது சக்ரசம்வரின் இன்னொரு பெயரும் ஆகும்

ஹேருகர்கள்(हेरुक) என்பது திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகளை குறிக்கும். இவர்கள் உலகத்தின் உயிர்கள் உய்ய வேண்டி உக்கிர உருவத்தை கொண்டுள்ளனர். ஹேருகர்கள் சூன்யத்தன்மையின் உருவகமாக கருதப்படுபவர்கள்[1]

சொற்பொருளாக்கம்

[தொகு]

ஹேருகர் என்பதை ஹே + ருக(रुक) என்ற இருசொற்கள் இணைந்து ஹேருகர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. ருக - என்றால் அளவில்லாத என்று பொருள்.

எட்டு ஹேருகர்கள்

[தொகு]

கீழ்க்காணும் எட்டு ஹேருகர்கள் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு குணங்களின் அதிதேவதையாகவும் கருதப்படுகின்றனர்.

  1. யமாந்தகர், உக்கிர மஞ்சுஸ்ரீ, உடலின் அதிதேவதை
  2. ஹயக்ரீவர் மற்றும் அவலோகிதேஷ்வரர், பேச்சின் அதிதேவதை [2]
  3. விஷுத்தர்(बिशुद्ध)/ஸ்ரீ சமயக் உக்கிர வஜ்ரபாணி, மனதின் அதிதேவதை
  4. வஜ்ராம்ருதர்(वज्रामृत) உக்கிர சமந்தபத்திரர், உத்தம குணங்களின் அதிதேவதை
  5. வஜ்ரகீலயர், உக்கிர நிவாரணவிஷ்கம்பின், செயலின் அதிதேவதை
  6. மாதரர் உக்கிர ஆகாயகர்பர், விரைவாற்றலில் அதிதேவதை
  7. லோகஸ்தோத்ரபூஜ-நாதர் உக்கிர ஷிதிகர்பர்(க்ஷிதிகர்பர்), நிவேதனம் மற்றும் துதியின் அதிதேவதை
  8. வஜ்ரமந்திரபிரு(वज्रमन्त्रभिरु) உக்கிர மைத்திரேயர், உக்கிர மந்திரங்களின் அதிதேவதை

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


  1. THE PRACTICES OF HERUKA & VAJRAYOGINI
  2. What’s so special about Hayagriva?
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேருகர்கள்&oldid=3592193" இலிருந்து மீள்விக்கப்பட்டது