சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்
Appearance
(சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சத்தீசுகர் ஆளுநர் | |
---|---|
![]() | |
வாழுமிடம் | ஆளுநர் இல்லம்; இராய்ப்பூர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | தி. ந. சகே |
உருவாக்கம் | 1 நவம்பர் 2000 |

சத்தீசுகர் ஆளுநர் பெயரளவிலான தலைவராகவும், சத்தீசுகர் மாநிலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரி பிரதிநிதியாகவும் உள்ளார். ஆளுநர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். 31 ஜூலை 2024 முதல் தற்போதைய ஆளுநர் இராமென் தேகா ஆவார்.
அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்
[தொகு]ஆளுநர் பல்வேறு வகையான அதிகாரங்களை அனுபவிக்கிறார்:
- நிர்வாகம், நியமனங்கள் மற்றும் நீக்கம் தொடர்பான செயலாட்சியர் அதிகாரங்கள்,
- சட்டமியற்றுதல் மற்றும் மாநில சட்டமன்றம், அதாவது மாநிலச் சட்டப் பேரவை அல்லது மாநிலச் சட்டமன்ற மேலவை தொடர்பான சட்டமன்ற அதிகாரங்கள் மற்றும்
- ஆளுநரின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்படும் விருப்புரிமை அதிகாரங்கள்.
சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்
[தொகு]# | பெயர் | படிமம் | பதவி துவக்கம் | பதவி முடிவு | கால அளவு |
---|---|---|---|---|---|
1 | தி. ந. சகே | 1 நவம்பர் 2000 | 1 சூன் 2003 | 2 ஆண்டுகள், 212 நாட்கள் | |
2 | கிருஷ்ண மோகன் சேத் | ![]() |
2 சூன் 2003 | 25 சனவரி 2007 | 3 ஆண்டுகள், 237 நாட்கள் |
3 | ஈ. சீ. இல. நரசிம்மன் | ![]() |
26 சனவரி 2007 | 23 சனவரி 2010 | 2 ஆண்டுகள், 362 நாட்கள் |
4 | சேகர் தத் | ![]() |
24 சனவரி 2010 | 19 சூன் 2014 | 4 ஆண்டுகள், 146 நாட்கள் |
— | ராம் நரேஷ் யாதவ் (செயல்) | ![]() |
19 சூன் 2014 | 14 சூலை 2014 | 0 ஆண்டுகள், 25 நாட்கள் |
5 | பல்ராம்ஜி தாஸ் டாண்டன் | ![]() |
18 சூலை 2014[1] | 14 ஆகத்து 2018 | 4 ஆண்டுகள், 27 நாட்கள் |
— | ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) | ![]() |
15 ஆகத்து 2018[2] | 28 சூலை 2019 | 0 ஆண்டுகள், 347 நாட்கள் |
6 | அனுசுயா யுகே | ![]() |
29 சூலை 2019 | 12 பெப்பிரவரி 2023 | 3 ஆண்டுகள், 208 நாட்கள் |
7 | பிசுவபூசண் அரிச்சந்தன் | ![]() |
23 பெப்பிரவரி 2023 [3] | 30 ஜூலை 2024 | 1 ஆண்டு, 158 நாட்கள் |
8 | இராமென் தேகா | ![]() |
31 சூலை 2024 | தற்பொழுது கடமையாற்றுபவர் | 0 ஆண்டுகள், 193 நாட்கள் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Governors of UP, Bengal, Chhattisgarh, Gujarat and Nagaland named". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.
- ↑ "Anandiben Patel to hold additional charge as Chhattisgarh Governor" (in en). 14 August 2018 இம் மூலத்தில் இருந்து 27 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221127164820/https://news.abplive.com/india-news/anandiben-patel-to-hold-additional-charge-as-chhattisgarh-governor-742375. பார்த்த நாள்: 27 November 2022.
- ↑ "Harichandan to swear-in on February 23", Lalluram English, 19 February 2023
வெளியிணைப்புகள்
[தொகு]