பிசுவபூசண் அரிச்சந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுவபூசண் அரிச்சந்தன்
23வது ஆந்திரப் பிரதேச ஆளுஞர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
24 ஜூலை 2019
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
முன்னவர் ஈ. சீ. இ. நரசிம்மன்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1997–2009
தொகுதி புவனேசுவரம் மத்திய சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1990–1995
தொகுதி சில்க்கா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1977–1980
தொகுதி சில்க்கா சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 ஆகத்து 1934 (1934-08-03) (அகவை 89)
குடியுரிமை இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பணி
  • அரசியல்வாதி
  • வழக்கறிஞர்
  • எழுத்தாளர்
தொழில் வேந்தர்-சிறீ பி. அரிச்சந்தன் கிருஷ்ணா பல்கலைக்கழகம்
பொருப்புகள் சட்ட்ம், வருவாய், மீன்வள அமைச்சர் ஒரிசா அரசு
(2004–2009)
விருதுகள் கலிங்கா ரத்னா சமான் 2021

பிசுவபூசண் அரிச்சந்தன் (Biswabhusan Harichandan)(பிறப்பு 3 ஆகஸ்ட் 1934)[1] ஆந்திரப் பிரதேசத்தின் 23வது மற்றும் தற்போதைய ஆளுநராகப் பணியாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார்.

அரசியல் வாழ்க்கையும் பணியும்[தொகு]

அரிச்சந்தன் பாரதிய ஜனசங்கத்தில் 1971-ல் சேர்ந்தார். பாரதிய ஜனசங்கத்தில் தேசிய செயல் உறுப்பினர் மற்றும் ஒரிசா மாநில பொதுச்செயலாளராக ஜனதா கட்சி 1977-ல் தோன்றும் வரை பொறுப்பு வகித்தார்.[2] நெருக்கடி நிலைக் காலத்தில் இவர், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் 1980-ல் பாரதிய ஜனதா கட்சி உருவான பிறகு , இவர் ஜனதா தளத்துடன் கைகோர்ப்பதற்கு முன்பு 1988 வரை மாநிலத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996-ல் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

அரிசந்தன் ஒடிசா மாநில சட்டப் பேரவைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சில்க்கா ஏரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1977ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் 1990-ல் ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தார். 1997ஆம் ஆண்டு புவனேசுவரம் மத்திய தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தொடர்ந்து மூன்று முறை இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியில் தொடர்ந்தார். 2004-ல் பிஜுஜனதா தளம்-பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார்.

ஜூலை 2019-ல், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆந்திரா மற்றும் தெலங்காணா ஆளுநர்களை மாற்றியமைத்தார். அரிச்சந்திரன் ஆந்திராவின் 23வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

17 நவம்பர் 2021 அன்று, அரிசந்தனுக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.[4]

விருதுகள்[தொகு]

அரிசந்தன் 2021-ல் கலிங்க ரத்னா விருது பெற்றார்.[5]

பனுவல்கள்[தொகு]

அரிசந்தன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: மருபதாசு, மகாசங்கராமர் மகாநாயக், பக்சி ஜகபந்து , பைகா கலகம் மற்றும் இவரது சுயசரிதை சங்கர்சா சரினாகின்.

மேற்கோள்கள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
24 ஜூலை 2019 – முதல்
பதவியில் உள்ளார்