ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன்
E.S.L. Narasimhan.jpg
தெலுங்கானா ஆளுநர்
பதவியில்
சூன் 2, 2014 – செப்டம்பர் 7, 2019
முன்னவர் புதிதாக உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் Dr.தமிழிசை சௌந்தரராஜன்
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
27 திசம்பர் 2009 – 23 ஜூலை 2019
முன்னவர் நாராயண் தத் திவாரி
பின்வந்தவர் பிஸ்வபுஷண் ஹரிசந்தன்
பதவியில்
25 சனவரி 2007 – 23 சனவரி 2010
முன்னவர் கிருஷ்ண மோகன் சேத்
பின்வந்தவர் சேகர் தத்
தனிநபர் தகவல்
பிறப்பு 1946 (அகவை 76–77)
வாழ்க்கை துணைவர்(கள்) விமலா நரசிம்மன்

ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன் (Ekkadu Srinivasan Lakshmi Narasimhan) (பிறப்பு 1945) ஒரு இந்திய அரசியல்வாதியும் , திசம்பர் 2009 முதல் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராவார்[1] அதற்கு முன் 2007 முதல் 2010 வரை சத்தீசுக்கரின் ஆளுநராகவும் பதவி வகித்தார் [2]தெலுங்கானா மாநிலத்தின் ஆளுனராக சூன் 2, 2014 அன்று பதவியேற்றுக் கொண்டார்.[3]

இளமை வாழ்வு[தொகு]

நரசிம்மன் 1945ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தார். ஐதராபாத்தில், சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வருட தொடக்கப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, சென்னையில் தனது முழு பள்ளிக் கல்வியையும் முடித்தார். பின்னர் இயற்பியலில் கல்லூரி கல்வியினை தொடங்கிய இவர், இயற்பியலிருந்து அரசியல் அறிவியல் மேல் படிப்பினை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். இக்கல்வியின் போது முதல் மதிப்பெண் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். இவர் மதராசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். புது தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரியில் தமது கல்வியை முடித்து இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார்.[4]

பணிவாழ்வு[தொகு]

நரசிம்மன் ஆந்திரப் பிரதேசத்திற்கான 1968ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி கூற்றினைச் சேர்ந்தவர். 1981ஆம் ஆண்டு முதல் 1984 வரை மாசுகோ தூதரகத்தில் முதல் செயலாளராக பணி புரிந்தார். மிகவும் மதிப்பிற்குரிய அறிவுசால் அதிகாரியாக கருதப்பட்டார்.

பல ஆண்டுகள் ஒற்று அமைப்பில் பணி புரிந்து பதவி உயர்வுகள் பெற்று திசம்பர் 31, 2006 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் இயக்குநராக பணி ஓய்வு பெற்றார்.[5]

அரசியல் வாழ்வு[தொகு]

சனவரி 19, 2007 அன்று நரசிம்மன் சத்தீசுக்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு சனவரி 25 அன்று பதவியேற்றுக் கொண்டார்.[6] திசம்பர் 27, 2009 அன்று ஆந்திரப் பிரதேச ஆளுநர் நாராயண் தத் திவாரி பாலியல் அவதூற்றினால் பதவியிலிருந்து விலகியபோது அம்மாநில ஆளுநராக தற்காலிக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.[1] சனவரி 23, 2010 முதல் ஆந்திரப் பிரதேசத்தின் முழுநேர ஆளுநராக முறைப்படி நியமிக்கப்பட்டார்.[2]

தனிவாழ்வு[தொகு]

விமலா நரசிம்மன் இவரது மனைவி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அரசு பதவிகள்
முன்னர்
கிருஷ்ண மோகன் சேத்
சத்தீசுக்கர் ஆளுநர்
25 சனவரி 2007 – 23 சனவரி 2010
பின்னர்
சேகர் தத்
முன்னர்
நாராயண் தத் திவாரி
ஆந்திரப் பிரதேசம் ஆளுநர்
27 டிசம்பர் 2009 – 23 ஜூலை 2019
பின்னர்
பிசுவபூசண் அரிச்சந்தன்

வெளியிணைப்புகள்[தொகு]