ஜெகன் மோகன் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி
மக்களவை உறுப்பினர்
பதவியில்
13 May 2011 - present [1]
முன்னவர் எ. ச. விவேகானந்தா ரெட்டி
தொகுதி கடப்பா
தனிநபர் தகவல்
பிறப்பு 21 திசம்பர் 1972 (1972-12-21) (அகவை 45)
கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்துலா எனும் ஊர், ஆந்திரப் பிரதேசம்
வாழ்க்கை துணைவர்(கள்) எ. ச. பாரதி
பிள்ளைகள் 2
இருப்பிடம் ஐதராபாத்/பெங்களூரு
சமயம் தென்னிந்தியத் திருச்சபை (ஆங்கிலிக்கம்)

எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందిటి జగన్మోహన రెడ్డి)(பிறப்பு திசம்பர் 21, 1972),[2] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் கடப்பா தொகுதி மக்களவை உறுப்பினராகவும் உள்ளார்.[3] இவர் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனாவார்.

தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்னும் கட்சியை 2010ல் தொடங்கினார். பின்னர் 2011 இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேச வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.

தற்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.[4]

மூலம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகன்_மோகன்_ரெட்டி&oldid=2215032" இருந்து மீள்விக்கப்பட்டது