கோவா ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோவா ஆளுநர் 
Emblem of India.svg
'ராஜ் பவன், கோவா'
தற்போது
மிருதுளா சின்கா

26 ஆகத்து 2014 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், பனஜி (கோவா)
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதல் கோவா ஆளுநர்கோபால் சிங்
உருவாக்கப்பட்ட ஆண்டு1 ஏப்ரல் 1936 (1936-04-01) (83 ஆண்டுகளுக்கு முன்னர்)
இணைய தளம்www.goa.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள கோவா மாநிலம்.

கோவா ஆளுநர்களின் பட்டியல் கோவா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பனஜியில் உள்ள ராஜ்பவன் (கோவா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோவாவின் ஆளுநராக மிருதுளா சின்கா 26 ஆகத்து, 2014 முதல் பொறுப்பு வகிக்கின்றார்.

கோவா 30 ஜூலை, 1987-க்கு முன்புவரை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. அதன் பின் மாநிலமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரவரம்பு மற்றும் செயற்பாடுகள்[தொகு]

ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

  • செயலாட்சி அதிகராங்கள் நிருவாகம், நியமனம் மற்றும் நீக்கல் அதிகாரங்கள்,
  • சட்டமன்ற அதிகாரங்கள் மாநிலங்களின் சட்டமன்றம் மூலம் சட்டங்களை உருவாக்குதல். (சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற கீழவை)
  • வரையறைக்குட்பட்ட அதிகாரங்கள் ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் (அ) வரையறைக்குட்படுத்தப்பட்ட அதிகாரங்களின்படி செயல்படும் அதிகாரங்கள்.

அலுவல்நிலை அதிகாரங்கள்[தொகு]

  • ஆளுநர் அம்மாநில பல்கலைக்கழக வேந்தராக அவரின் அலுவல்நிலை அதிகாரங்களின்படியும், கோவா பல்கலைக்கழக சட்டம், 1984 இன்படியும் அப்பொருப்பை வகிக்கின்றார்.
  • ஆளுநர் அலுவல்நிலை அதிகாரத்தின்படி (ex-officio-எக்ஸ் அபிசியோ) இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவா மாநிலக் கிளைத் தலைவராக பொறுப்பு வகிக்கின்றார். கோவா மாநில செஞ்சிலுவைச் சங்கத்தின் கூட்டத் தலைவர் (chairman-சேர்மேன்) மற்றும் சிறப்புச் செயலாளர்கள (Hon. Secretary-ஆனரரி செக்ரட்டரி) ஆளுநரால் தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
  • ஆளுநர் கோவா மாநில சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழுத்தலைவராக செயல்படுகின்றார். இக்குழுவில் அரசு செயலர்கள் மற்றும் அரசு சாரா அலுவலர்கள் இடம்பெற்று ஆறு மாதத்திற்கொருமுறை இக்குழுக் கூட்டபெற்று கோவா மாநிலத்தின் சுற்றுச்சூழல், சூழிலியல் இவைகளை ஆராய்ந்து முடிவெடுக்கின்றது.
  • ஆளுநர் ஒய்வுபெற்ற இராணுத்தினர், மற்றும் விதவைகளுக்கான மறுவாழ்வு நிதியத்தின் கூட்டத் தலைவராக செயல்படுகின்றார்.

கோவா முன்னாள் ஆளுநர்களின் பட்டியல்[தொகு]

போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநர்கள்[தொகு]

முதல் போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) 1505 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டி அல்மீதா வும் கடைசித் தலைமை ஆளுநராக மனுவல் அன்டோனியோ ஒசலோ இ சில்வா 1961 வரை பொறுப்ப வகித்தனர். கோவாவில் மொத்தம் 163 தலைமை ஆளுநர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். மொத்தப்பட்டியலைக் காண இத்தளத்தை தொடர்பு கொள்ளவும்; ராஜ்பவன் கோவா அரசு இணையம்.

துணைநிலை ஆளுநர்கள்[தொகு]

கோவா, தாமன் டையூவுடன் இணைந்து இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக 30 மே, 1987 வரை செயல்பட்டது. அதுவரை அப்பகுதியை துணைநிலை ஆளுநர்களே கோவாவின் அட்சி பொறுப்பை ஏற்றிருந்தனர்.[1]

கோவாவின் முன்னாள் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் துணைநிலை ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கே. பி. கேன்டித் (இராணுவ ஆளுநர்) 19 டிசம்பர் 1961 6 ஜூன் 1962
2 டி. சிவசங்கர் 7 ஜூன் 1962 1 செப்டம்பர் 1963
3 எம். ஆர். சச்தேவ் 2 செப்டம்பர் 1963 8 டிசம்பர் 1964
4 ஹரி சர்மா 12 டிசம்பர் 1964 23 பெப்ரவரி 1965
5 கே. ஆர். டம்லே 24 பெப்ரவரி 1965 17 ஏப்ரல் 1967
6 நகுல் சென் 18 ஏப்ரல் 1967 15 நவம்பர் 1972
7 எஸ். கே. பானர்ஜி 16 நவம்பர் 1972 15 நவம்பர் 1977
8 பி. எஸ். கில் 16 நவம்பர் 1977 30 மார்ச் 1981
9 ஜக்மோகன் 31 மார்ச் 1981 29 ஆகஸ்டு 1982
10 ஐ.எச். லத்திப் 30 ஆகஸ்டு 1982 23 பெப்ரவரி 1983
11 கே. டி. சத்தரவாலா 24 பெப்ரவரி 1983 3 ஜூலை 1984
12 ஐ. எச். லத்திப் 4 ஜூலை 1984 23 செப்டம்பர் 1984
13 கோபால் சிங் 24 செப்டம்பர் 1984 29 மே 1987

1987-க்குப்பின் பொறுப்பேற்ற ஆளுநர்கள்[தொகு]

கோவா 1987 முதல் ஆட்சிப்பகுதியிலுருந்து மாநிலமாக அறிவிக்கப்பட்டது அதுமுதல் பொறுப்பேற்ற மாநில ஆளுநர்கள்;

கோவாவின் (1987க்குப்பின்) முன்னாள் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கோபால் சிங் 30 மே 1987 17 ஜூலை 1989
2 குர்ஷத் ஆலம் கான் 18 ஜூலை 1989 17 மார்ச் 1991
3 பானு பிரக்காஷ் சிங் 18 மார்ச் 1991 3 ஏப்ரல் 1994
4 பி. ராச்சையா 4 ஏப்ரல் 1994 3 ஆகஸ்டு 1994
5 கோபால ராமானுஜம் 4 ஆகஸ்டு 1994 15 ஜூன் 1995
6 ரோமேஷ் பண்டாரி 16 ஜூன் 1995 18 ஜூலை1996
7 பி. சி. அலெக்சாண்டர் 19 ஜூலை 1996 15 ஜனவரி 1998
8 டி. ஆர். சத்தீஷ் சந்திரன் 16 ஜனவரி 1998 18 ஏப்ரல் 1998
9 ஜே. எப். ஆர். ஜேக்கப் 19 ஏப்ரல் 1998 26 நவம்பர் 1999
10 முகம்மது பசூல் 26 நவம்பர் 1999 25 அக்டோபர் 2002
11 கிதார் நாத் சகானி 26 அக்டோபர் 2002 2 ஜூலை 2004
12 முகம்மது பசூல் 3 ஜூலை 2004 16 ஜூலை 2004
13 எஸ். சி. ஜமீர் 17 ஜூலை 2004 21 ஜூலை 2008
14 சிவிந்தர் சிங் சித்து 21 ஜூலை 2008 29 ஏப்ரல் 2012
15 பி. வி. வாஞ்சூ 29 ஏப்ரல் 2012 சூலை 12 2014
15 மார்கரட் ஆல்வா சூலை 12 2014 ஆகஸ்டு 7 2014
15 ஓம்.பிரகாஷ் கோலி ஆகஸ்டு 7 2014 ஆகஸ்டு 26 2014
15 மிருதுளா சின்கா[2] ஆகஸ்டு 26 2014 தற்பொழுது கடைமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Governors of Goa since Liberation". rajbhavangoa.org. மூல முகவரியிலிருந்து 9 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 July 2011.
  2. "Mridula Sinha sworn-in as Goa Governor". The Hindu. 31 August 2014. http://www.thehindu.com/news/national/other-states/mridula-sinha-swornin-as-goa-governor/article6366894.ece. பார்த்த நாள்: 11 March 2015. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]