பெமேதரா

ஆள்கூறுகள்: 21°42′N 81°32′E / 21.70°N 81.53°E / 21.70; 81.53
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெமேதரா
நகரம்
பெமேதரா is located in சத்தீசுகர்
பெமேதரா
பெமேதரா
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெமேதரா நகரத்தின் அமைவிடம்
பெமேதரா is located in இந்தியா
பெமேதரா
பெமேதரா
பெமேதரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°42′N 81°32′E / 21.70°N 81.53°E / 21.70; 81.53
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்பெமேதரா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பெமேதரா நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்11.82 km2 (4.56 sq mi)
ஏற்றம்278 m (912 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்28,536
 • அடர்த்தி2,400/km2 (6,300/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, சத்திசுகரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்491335 [2]
தொலைபேசி குறியீடு07824
வாகனப் பதிவுCG 25
இணையதளம்www.bemetara.gov.in

பெமேதரா (Bemetara), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நடுவில் அமைந்த பெமேதரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புவியியல்[தொகு]

இந்நகரத்தின் கிழக்கில் சிவநாத் ஆறு பாய்கிறது. இதன் தெற்கில் அடர்ந்த காடுகள் கொண்டது. இதன் வடமேற்கில் மைக்கல் மலைத்தொடர்கள் உள்ளது. இதன் வடக்கில் சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் மற்றும் தெற்கில் தக்காண பீடபூமி உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 வார்டுகளும், 5800 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 28,536 ஆகும். அதில் ஆண்கள் 14,280 மற்றும் பெண்கள் 14,256 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 998 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,398 மற்றும் 884 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.46%, இசுலாமியர் 4.14%, சீக்கியர்கள் 2.59%, கிறித்தவர்கள் 0.32%, மற்றும் பிறர் 0.49% ஆகவுள்ளனர்.[3]இங்கு இந்தி மொழி, சத்திசுகரி மொழிகள் பேசப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 12 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது. இந்நகரத்தின் சாலைகள் ராய்ப்பூர், பிலாஸ்பூர், துர்க், ஜபல்பூர் மற்றும் கவர்தா நகரங்களுட்ன இணைக்கிறது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பெமேதரா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27
(81)
30
(86)
35
(95)
39
(102)
45
(113)
36
(97)
30
(86)
30
(86)
31
(88)
31
(88)
28
(82)
26
(79)
32
(90)
தாழ் சராசரி °C (°F) 13
(55)
15
(59)
20
(68)
24
(75)
27
(81)
26
(79)
23
(73)
23
(73)
22
(72)
21
(70)
16
(61)
14
(57)
20
(68)
பொழிவு mm (inches) 10
(0.39)
17
(0.67)
14
(0.55)
13
(0.51)
18
(0.71)
239
(9.41)
383
(15.08)
364
(14.33)
197
(7.76)
50
(1.97)
11
(0.43)
16
(0.63)
1,330
(52.36)
ஆதாரம்: [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook – Durg" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. p. 22. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. Bemetara
  3. Bemetara Population, Religion, Caste Census 2011
  4. "Historical Weather for Bemetara, Assam, India". Whetherbase. பார்க்கப்பட்ட நாள் 18 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெமேதரா&oldid=3620830" இலிருந்து மீள்விக்கப்பட்டது