சூரஜ்பூர்

ஆள்கூறுகள்: 23°13′N 82°51′E / 23.22°N 82.85°E / 23.22; 82.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரஜ்பூர்
நகரம்
சூரஜ்பூர் is located in சத்தீசுகர்
சூரஜ்பூர்
சூரஜ்பூர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சூரஜ்பூர் நகரத்தின் அமைவிடம்
சூரஜ்பூர் is located in இந்தியா
சூரஜ்பூர்
சூரஜ்பூர்
சூரஜ்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°13′N 82°51′E / 23.22°N 82.85°E / 23.22; 82.85
நாடு India
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்சூரஜ்பூர்
அரசு
 • வகைநகராட்சி
ஏற்றம்528 m (1,732 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்20,189
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்497229
தொலைபேசி குறியீடு07775
வாகனப் பதிவுCG 29
இணையதளம்surajpur.gov.in

சூரஜ்பூர் (Surajpur) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரம் இராய்ப்பூருக்கு வடக்கே 256 கிமீ தொலைவில் சூரஜ்பூர் நகரம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 43 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 15 வார்டுகளும், 4,397 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 20,189 ஆகும். அதில் ஆண்கள் 10,430 மற்றும் பெண்கள் 9,759 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2649 (13.12%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 867 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.89% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 82.40%, முஸ்லீம்கள் 13.73%, சமணர்கள் 1.69%, கிறித்தவர்கள் 1.49% மற்றும் பிறர் 0.69 ஆகவுள்ளனர்.[1][2]

போக்குவரத்து[தொகு]

சாலைகள்[தொகு]

கட்னி-பிலாஸ்பூர்-ராய்ப்பூர், பிலாய் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 43 சூரஜ்பூர் நகரத்தின் வழியாகச் செல்கிறது.

வானூர்தி நிலையம்[தொகு]

அருகமைந்த வானூர்தி நிலையம் இராய்ப்பூரில் உள்ளது.

தொடருந்து நிலையம்[தொகு]

சுரஜ்பூர் நகத்திற்கு வடக்கே 6 கிமீ தொலைவில் சூரஜ்பூர் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது. சூரஜ்பூர் ரோடு தொடருந்து நிலையத்திலிருந்து துர்க், ஷடோல், அம்பிகாபூர் நகரங்களுக்கு பயணியர் வண்டிகள் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்பூர்&oldid=3297457" இலிருந்து மீள்விக்கப்பட்டது