பல்ராம்ஜி தாஸ் டாண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்ராம் தாசு டாண்டன் (Balram Das Tandon, 1927- ) இந்திய அரசியல்வாதியும் தற்போதைய சத்தீசுகரின் ஆளுநரும் ஆவார்.[1] பஞ்சாபின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1969-70இல் குர்னாம் சிங் தலைமையிலமைந்த அகாலி தளம்-பாரதீய ஜனசங்கம் ஆட்சியில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.பிரகாசு சிங் பாதலின் அமைச்சரவையில் 1977–79 மற்றும் 1997–2002 காலங்களில் ஆய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1951இல் பாரதீய ஜனசங்கம் உருவானபோதிலிருந்து உறுப்பினராக உள்ள டாண்டன் அக்கட்சியின் பஞ்சாப் மாநில செயலாளராக 1951 முதல் 1957 வரையும் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1995–97 காலத்திலும் பொறுப்புக்கள் ஏற்றுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அம்ரித்சரிலிருந்து 1960,1962,1967,1969 மற்றும் 1977இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; 1997இல் இராஜபுரா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] சூலை 14, 2014 அன்று அடுத்த சத்தீசுகர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்சான்றுகள்[தொகு]