தினேஷ் நந்தன் சகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேஷ் நந்தன் சகே
10வது திரிபுரா ஆளுநர்
பதவியில்
2 சூன் 2003 – 14 அக்டோபர் 2009
முதலமைச்சர்மாணிக் சர்க்கார்
முன்னையவர்கிருஷ்ண மோகன் சேத்
பின்னவர்கம்லா பெனிவால்
1வது சத்தீசுகர் ஆளுநர்
பதவியில்
1 நவம்பர் 2000 – 1 சூன் 2003
முதலமைச்சர்அஜித் ஜோகி
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
பின்னவர்கிருஷ்ண மோகன் சேத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-02-02)2 பெப்ரவரி 1936
மேதாபூர், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்பொழுது பீகார், இந்தியா)
இறப்பு28 சனவரி 2018(2018-01-28) (அகவை 81)
பாட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிசமதா கட்சி
துணைவர்மஞ்சு சஞ்சய்
பிள்ளைகள்3
பெற்றோர்s
  • தேவா நந்தன் சகே (father)
  • கிசோரி தேவி (mother)

தினேஷ் நந்தன் சகே (Dinesh Nandan Sahay; 2 பிப்ரவரி 193628 சனவரி 2018)[1] என்பவர் இந்தியக் காவல்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பீகார் காவல்துறைத் தலைவராகவும், பின்னர் திரிபுரா, சத்தீசுகர் மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றினார் .

இளமை[தொகு]

சகே பீகாரின் மாதேபூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் கிஷோரி தேவி மற்றும் தேவ நந்தன் சகே ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பாட்னாவில் வளர்ந்தார். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பினை முடித்தார். இவர் மஞ்சு சகேயை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

காவல் பணி[தொகு]

1960-ல் இந்தியக் காவல் பணியில் சேருவதற்கு முன்பு எச். டி. அர்ரா கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது பணியினை தொடங்கினார். இதன்பின், பீகார் மாநிலத்தின் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

அரசியல்[தொகு]

காவல் பணி ஓய்வுக்குப் பிறகு சமதா கட்சியில் சேர்ந்தார். 2000 முதல் 2003 வரை சத்தீசுகர் மாநிலத்தின் முதல் ஆளுநராக இருந்தார். சூன் 2003-ல் திரிபுரா ஆளுநரானார். 2009 வரை இந்தப் பதவியில் தொடர்ந்தார். இருப்பினும் பாரம்பரியமாக ஆளுநர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் சகே விதிவிலக்காகக் கூடுதல் காலம் பதவியிலிருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chhattisgarh Guv, CM condole demise of Dinesh Nandan Sahay
  2. "Konwar sworn in as Tripura governor -" The Telegraph (india) 26 March 2013
அரசியல் பதவிகள்


முன்னர்
புதிதாக உருவாக்கப்பட்டது
சத்தீசுகர் ஆளுநர்
1 நவம்பர் 2000 – 1 சூன் 2003
பின்னர்
கிருஷ்ண மோகன் சேத்
முன்னர்
கிருஷ்ண மோகன் சேத்
திரிபுரா ஆளுநர்
2 சூன் 2003 – 14 அக்டோபர் 2009
பின்னர்
கம்லா பெனிவால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_நந்தன்_சகே&oldid=3721184" இலிருந்து மீள்விக்கப்பட்டது