சாத்பூரா மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாத்பூரா மலைத் தொடர்
Satpura Range
பச்மாரி பள்ளத்தாக்கு
மிக உயர்ந்த புள்ளி
கொடுமுடிதூப்கார்
உயரம்1,350 m (4,430 ft)
புவியியல்
நாடு இந்தியா
மாநிலங்கள்மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, சத்தீசுகர் and குசராத்து
தொடரின் ஆள்கூறுகள்22°27′2″N 78°22′14″E / 22.45056°N 78.37056°E / 22.45056; 78.37056
நிலவியல்
மலையாக்கச் செயல்முறைஆய்வு
இந்திய புவியமைப்பு

சாத்பூரா மலைத்தொடர் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது கிழக்குக் குஜராத்தில் அரபிக் கடலுக்கு அருகில் தொடங்குகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களூடாகச் சென்று சட்டிஸ்கரில் முடிவடைகிறது.[1]

இம் மலைத்தொடர் விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே அதற்கு இணையாகச் செல்கிறது. ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ள இவ்விரு மலைத்தொடர்களும், சிந்து-கங்கைச் சமவெளி அமைந்த வட இந்தியாவையும் பாகிஸ்தானையும், தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்தில் இருந்து பிரிக்கின்றன. இவ்விரு மலைத்தொடர்களுக்கும் இடையிலான தாழ்ந்த பகுதியில் ஓடும் நர்மதை ஆறு சத்புரா மலைத்தொடரின் வடக்குச் சரிவிலிருந்து வடிந்தோடும் நீரை அரபிக் கடலை நோக்கி எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் மேற்கு முனைப் பகுதியின் தெற்குச் சரிவிலிருந்து வடியும் நீரை தப்தி ஆறு எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் நடுப்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்து நீர் கோதாவரி ஆற்றினூடாக வடிகிறது. இத்தொடரின் கிழக்கு முனைப்பகுதி நீர் மகாநதி ஊடாக வடிகிறது. இவ்விரு ஆறுகளும் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. சத்புரா மலைத்தொடரின் கிழக்கு முனையருகில், இது சோட்டா நாக்பூர் மேட்டுநிலக் குன்றுகளைச் சந்திக்கின்றது.

முன்னர் சத்புரா மலைத்தொடர் காடடர்ந்த பகுதியாக இருந்தது. இப்பொழுது சில குறிப்பிடத்தக்க காட்டுப் பகுதிகள் தவிரப் பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இக் காடுகள் இந்தியாவின் எஞ்சியுள்ள பெரிய பாலூட்டிகளின் உறைவிடமாக உள்ளன.

இம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதி மேற்குப் பகுதியிலும் கூடிய மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. இக் கிழக்குப் பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுடன் சேர்ந்து கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலத்தை உருவாக்குகின்றது. பருவகாலத்தையொட்டி வரண்டு காணப்படும் இம் மலைத்தொடரின் மேற்குப் பகுதி, நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு, விந்திய மலைத்தொடரின் மேற்குப் பகுதி என்பன சேர்ந்து நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலமாக அமைகின்றன.

பெயர்க்காரணம்[தொகு]

நூறு மலைகள் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான சாத்பூரா என்ற சொல்லில் இருந்து சாத்பூரா மலைத்தொடர் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது.

புவியியல்[தொகு]

சாத்பூரா மலைத்தொடரின் கிழக்குப் பகுதி மேற்கு பகுதியை விட அதிக மழையைப் பெறுகிறது. கிழக்கத்திய மேட்டுநில ஈர இலையுதிர்காடுகளின் சுற்றுச்சுழலால் சாத்பூரா மலைத்தொடரின் கிழக்குப் பகுதியும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் ஆக்கப்பட்டுள்ளன. இம்மலைத் தொடரின் வறண்ட மேற்கு பகுதியும் விந்திய மலைத்தொடரின் மேற்கு பகுதியுடன் இணைந்த நர்மதா பள்ளத்தாக்கும் நர்மதா பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழலுக்குள் அடங்கியுள்ளன. நர்மதை ஆறும் தப்தி ஆறும் அரபிக் கடலுக்குள் சங்கமிக்கின்ற முக்கிய ஆறுகளாகும். இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நர்மதை ஆறு தோன்றுகிறது. மாநிலத்தின் குறுக்காக மேற்கு நோக்கி விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையில் மகாராட்டிரம் மற்றும் குசராத்தில் காம்பே வளைகுடாவில் இது பாய்கிறது. தபதி ஆறு தெற்கில் நர்மதை ஆற்றுக்கு இணையாக 80 மற்றும் 160 கிலோமீட்டர் தொலைவுக்குப் குறுகலாகப் பாய்ந்தோடுகிறது.

சூழலியல்[தொகு]

சாத்பூரா மலைத்தொடரில் பெரும்பாலானவை பெருங்காடுகளாக இருந்தன; ஆனால் சமீபத்திய பத்தாண்டுகளில் இப்பகுதி படிப்படியாக காடழிப்புக்கு உட்பட்டுள்ளது, இருப்பினும் இங்கு குறிப்பிடத்தக்க அளவுக்குக் காடுகள் உள்ளன. இக்காடுகள் சதுப்புநில மான் [2], வங்காளப் புலி இந்தியக் காட்டெருது, செந்நாய், தேன் கரடி, நாற்கொம்பு மான், புல்வாய் மான் போன்ற அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களுக்கு உறைவிடமாக உள்ளது. தற்போது சாத்பூரா மலைத்தொடரில் எண்ணற்ற புலிகள் காப்பகங்களும் இடம்பெற்றுள்ளன.

கன்கா தேசியப் பூங்கா, பெஞ்ச் தேசியப் பூங்கா, குகமால் தேசியப் பூங்காl மற்றும் சாத்புரா தேசியப் பூங்கா, பச்மரி உயிர்க்கோளக் காப்பகம், மேல்காட் புலிகள் காப்பகம், போரி காடு போன்ற இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள் பலவற்றுக்கு இம்மலைத் தொடரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாத்புரா அறக்கட்டளை இப்பகுதியில் பாதுகாப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது, வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள், பதிவு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு இம்மலைலைத் தொடரின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுகிறது.

புராணக் கதை[தொகு]

அரிவம்ச புராணத்தின் படி அந்த சாத்புரா மலையின் கீழ் அசுர குலத்தைச் சேர்ந்த தானவர்கள், தைத்தியர்கள் வாழ்ந்த "சத்பூர்" என்று அழைக்கப்படும் ஒரு நிலத்தடி நகரம் இருந்தது. பகவான் சிறீ கிருட்டிணர் அந்த நகரத்தின் கதவுகளை பூட்டிக் கொண்டு தானவர்களும் தைத்தியர்களும் வெளியே வருவதைத் தடுக்கிறார் என்பது அப்புரணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா[தொகு]

சாத்புரா மலைத்தொடரில் உள்ள தேசிய பூங்காக்கள், மலைவாழிடங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நகரங்கள் யாவும் ஒவ்வோர் ஆண்டும் நூறாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இங்கே பட்டியலிடப்பட்ட இடங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி உள்ளன.

  • அமர்கந்தாக்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூரிலுள்ள ஒரு நகர பஞ்சாயத்து மற்றும் புனித சுற்றுலா நகரம் ஆகும். அமர்கந்தாக் பகுதி ஒரு தனித்துவமான இயற்கை பாரம்பரியம் மிகுந்த பகுதி ஆகும் இது விந்தியா மற்றும் சாத்பூரா மலைத்தொடர்கள், மைக்கால் மலைகளை சந்திக்கும் முக்கியப் புள்ளியாகும். இப்பகுதியில் தான் நர்மதை ஆறு, சோன் ஆறு மற்றும் சோயிலா ஆறு போன்றவை தோன்றுகின்றன. 15-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கவிஞரான கபீர் இந்த நகரத்தில் உள்ள கபீர் மேடையில் தான் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது[3]

1968 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்டது. பந்தாவ்கர் எனும் சமசுகிருதச் சொல்லுக்கு சகோதரர்களின் கோட்டை என்று பொருள். இந்துக் கடவுள் ராமரும் அவரது சகோதரரான லட்சுமணரும் இங்கிருந்து இலங்கையைப் பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பூங்கா முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் நடைபெறும் இடமாகும். இப்பூங்காவில் அதிக அளவில் புலிகள் உள்ளன. மேலும் சிறுத்தைகள், மற்றும் மான்களும் அதிக அளவில் உள்ளன. இது ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.

இதனையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. Satpura Range
  2. "Exploring the Jungles of Satpura". பார்த்த நாள் 2 September 2019.
  3. "Kabir Chabutra".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்பூரா_மலைத்தொடர்&oldid=2818689" இருந்து மீள்விக்கப்பட்டது