கன்கா தேசியப் பூங்கா
Jump to navigation
Jump to search
கன்ஹா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() கன்ஹா தேசியப் பூங்காவிலுள்ள மான்களுள் ஒன்று | |
அமைவிடம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 22°20′0″N 80°38′0″E / 22.33333°N 80.63333°Eஆள்கூறுகள்: 22°20′0″N 80°38′0″E / 22.33333°N 80.63333°E |
பரப்பளவு | 940 சதுர கிலோமீட்டர்கள் |
நிறுவப்பட்டது | 1955 |
வருகையாளர்கள் | 1,000 (in 1989) |
நிருவாக அமைப்பு | மத்தியப் பிரதேச வனத்துறை |
கன்ஹா தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Kanha National Park) இந்தியாவில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.[1] இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாலாகாட் மாவட்டம் மற்றும் மண்ட்லா மாவட்டங்களில் அமைந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்போது இத்தேசியப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 940 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மத்திய இந்தியப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காக்களுள் மிகப்பெரியது இந்தத் தேசியப் பூங்கா ஆகும். இங்கு வங்காளப் புலிகள், சிறுத்தைகள், செந்நாய்கள் மற்றும் மான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இப்பூங்காவில் மூங்கில் மரங்களும் அதிக அளவில் உள்ளன. புகழ்பெற்ற புதினமான தி ஜங்கிள் புக் இப்பூங்காவின் உந்துதலால் எழுதப்பட்டது.
புகைப்படங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kanha Tiger Reserve". Madhya Pradesh Forest Department. 10 மார்ச் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 April 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)