மெய்தெய் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்தெய் மக்கள்
(மணிப்புரி மக்கள்)
பக்திசொரூப தாமோதர சுவாமி
சிங்-தாங் கோம்பா (இராஜரிஷி பாக்கியச்சந்திரன்)
எய்ஸ்னம் கன்னையாலால்
ஹிஜாம் எராபத்
பெம்பெம் தேவி
ராண்டி சிங்
இராபர்ட் நௌரெம்
இராஜ்குமார் சிங்காஜித் சிங்
சில குறிப்பிடத்தக்க மெய்தெய் மக்கள்
மொத்த மக்கள்தொகை
1,800,000+ (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா1,760,913[1]
           மணிப்பூர்1,522,132[2]
           அசாம்168,127[3]
           திரிபுரா23,779[4]
           நாகாலாந்து9,511[5]
           மேகாலயா4,451[6]
           அருணாச்சலப் பிரதேசம்2,835[7]
           மிசோரம்2,242[8]
 மியான்மர்25,000
 வங்காளதேசம்15,000
மொழி(கள்)
மணிப்புரியம்
சமயங்கள்
பெரும்பான்மை:
இந்து சமயம்
சிறுபான்மை:
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நாகா மக்கள், குகி மக்கள், சின் மக்கள், சௌ மக்கள், சோ மக்கள், பாமர் மக்கள், சான் மக்கள்

மெய்தெய் மக்கள் அல்லது மணிப்புரி மக்கள் (Meitei people), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் முக்கிய இனக்குழுவினர் ஆவார்.[9] இம்மக்கள் இந்தியக் குடியரசின் 22 அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றான மணிப்பூரின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியான மெய்தே மொழியை அதிகாரப்பூர்வமாக மணிப்புரியம் என்று அழைக்கிறார்கள்.[10][11]மெய்தெய் மக்கள் முதன்முதலில் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் குடியேறினர். இருப்பினும் கணிசமான மக்கள் மற்ற இந்திய மாநிலங்களான அசாம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மற்றும் மிசோரம் மாநிலங்களில் குடியேறினர்.[12] மேலும் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் வங்காளதேசத்திலும் மெய்தெய் மக்களின் குறிப்பிடத்தக்க இருப்பு உள்ளது.[13] மெய்தெய் இனக்குழு மணிப்பூரின் மக்கள் தொகையில் 53% ஆகும்.[13] மெய்தெய் மக்களை மீதேய், மெய்தேய், மற்றும் மெக்லே, மணிப்பூரி, கேஸ்ஸே-ஷான் மற்றும் கேதே (பர்மியம்) போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.

மொழி[தொகு]

மெய்தெய் மொழியின் எழுத்துமுறை

மெய்தெய் மக்கள் திபெத்திய-பர்மிய மொழியான மெய்தி மொழியை (மணிப்புரியம் என்றும் அழைக்கப்படுகிறது) பேசுகிறார்கள். மெய்தெய் இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகும், மேலும் 1992 இல் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.[14]

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்களால் மெய்தெய் மொழியின் எழுத்துமுறை மாற்றப்பட்டது.[15] [16] தற்போது அபுகிடா எழுத்துமுறையில் மெய்தெய் மொழியில் தெருப் பலகைகள், செய்தித்தாள்கள், இலக்கியம் மற்றும் சட்டமன்ற நடவடிக்கை பதிவுகளில் காணப்படுகிறது.[17]

மணிப்பூர் மாநிலத்தினர் தங்கள் தாய்மொழியான மணிப்புரியம் மொழியைவிட வங்காள மொழியில் கல்வி கற்கிறார்கள்.[18]

நீதிமன்ற அறிஞர்களால் எழுதப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க மெய்தே வரலாற்று இலக்கியப் படைப்புகளில் சில:

 • செய்தரோல் கும்பபா, மெய்தி மன்னர்களின் அரச வரலாறு
 • வகோக்லோன் ஹீலேல் திலேல் சலை அமைலோன் புகோக் புயா, தற்போதுள்ள மிகப் பழமையான மெய்தே கையெழுத்துப் பிரதி, முதன்முதலில் கிமு 1400 இல் எழுதப்பட்டது மற்றும் 1971 இல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
 • புயா, (மெய்தேய் நூல்கள்), பாதுகாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் (அதாவது "மூதாதையர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது")

நாட்காட்டி[தொகு]

கிரிகோரியன் நாட்காட்டியைப் போன்று 12 மாதங்கள் மற்றும் 7-நாட்கள் கொண்ட ஒரு வாரம் போன்ற மலியாஃபாம் பால்சா கும்சிங் என்ற பாரம்பரிய நாட்காட்டியை மெய்தெய் மக்கள் பின்பற்றுகின்றனர்.[19]

பண்பாடு[தொகு]

நடனம்[தொகு]

மணிப்புரி நடனத்தில் ராசலீலை
2018இல் ஆர்மீனியா நாட்டினர் வெளியிட்ட மணிப்புரி நடன அஞ்சல் தலை

பாரம்பரிய வண்ண உடைகளில் பெண்களும், ஆண்டுகளும் புகழ்பெற்ற மணிப்புரி நடன வடிவத்தில் ராசலீலை நடனம் ஆடப்படுகிறது. மணிப்புரி நடனக் கலை, இலக்கியம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் தங்கள் பங்களிப்பிற்காக அறியப்பட்டவர்களில் எம். கே. வினோதினி தேவி, குவைரக்பம் சாவோபா சிங், ரத்தன் தியாம், அரிபம் சியாம் சர்மா, ராஜ்குமார் ஷிடல்ஜித் சிங், எலங்பம் நீலகண்ட சிங், ஹெய்ஸ்னம் கன்னையாலால் மற்றும் சபித்ரி ஹெய்ஸ்னம் ஆகியோர் இந்தத் துறையில் உள்ள சில முக்கிய ஆளுமைகள்.

விழாக்கள்[தொகு]

நிங்கோல் சக்கோபா திருநாளின் போது திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற அக்கா, தங்கைகளை தாய்வீட்டுக்கு அழைத்து, சகோதரர்கள் விருந்தளிக்கும் சிறப்பு நிகழ்வு ஆகும்.

போர்க் கலை[தொகு]

மணிப்புரி மக்கள் தற்காப்புக் கலையான தாங்-தா ஒரு போர்க் கலை ஒரு விளையாட்டாகும். இது மன்னர்கள் ஆட்சியின் போது மெய்தி மாவீரர்களிடமிருந்து தோற்றம் பெற்றது. இது வாள் மற்றும் ஈட்டிகளுடன் பல்வேறு சண்டை நுட்பங்களை உள்ளடக்கியது. மெய்டே இன மக்கள் குதிரை சவாரி செய்வதை மிகவும் விரும்புகிறார்கள்.

நாடகம் மற்றும் திரைப்படம்[தொகு]

முதல் மணிப்பூரி திரைப்படம், மாதங்கி மணிப்பூர், 9 ஏப்ரல் 1972 அன்று வெளியிடப்பட்டது.[20]பாகும் அமா (1983) என்பது மணிப்புரி மொழியின் முதல் முழு நீள வண்ணத் திரைப்படமாகும்.[21]

குறிப்பிடத்தக்க மணிப்புரி மக்கள்[தொகு]

 1. பக்திசொரூப தாமோதர சுவாமி
 2. சைக்கோம் மீராபாய் சானு
 3. இலிசிப்ரியா கங்குஜாம்
 4. சிங்-தாங் கோம்பா (இராஜரிஷி பாக்கியச்சந்திரன்)
 5. எய்ஸ்னம் கன்னையாலால்
 6. பாம்பேலா தேவி இலைசுராம்
 7. ஹிஜாம் எராபத்
 8. ஐரோம் சர்மிளா
 9. பெம்பெம் தேவி
 10. ராண்டி சிங்
 11. இராபர்ட் நௌரெம்
 12. இராஜ்குமார் சிங்காஜித் சிங்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Languages Specified in the Eight Schedule (Scheduled Languages)" (PDF). census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020. Listed as Manipuri in the 2011 Indian census
 2. "C-16 Population By Mother Tongue - Manipur". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
 3. "C-16 Population By Mother Tongue - Assam". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
 4. "C-16 Population By Mother Tongue - Tripura". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
 5. "C-16 Population By Mother Tongue - Nagaland". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
 6. "C-16 Population By Mother Tongue - Meghalaya". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
 7. "C-16 Population By Mother Tongue - Arunachal Pradesh". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.
 8. "C-16 Population By Mother Tongue - Mizoram". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
 9. Samson, Kamei (2019). "Theorising Social Fear in the Context of Collective Actions in Manipur". Journal of Northeast Indian Cultures 4 (2): 12–43. http://journals.dbuniversity.ac.in/ojs/index.php/jneic/article/view/606/578. பார்த்த நாள்: 26 October 2020. 
  P.20: "historically, academically and conventionally Manipuri prominently refers to the Meetei people."
  P.24: "For the Meeteis, Manipuris comprise Meeteis, Lois, Kukis, Nagas and Pangal."
 10. "Meitei | people | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-15.
 11. "Manipuri language | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-15.
 12. Thokchom, Khelen (19 May 2008). "Myanmar Meiteis in search of roots". The Telegraph. https://www.telegraphindia.com/north-east/myanmar-meiteis-in-search-of-roots/cid/586856. 
 13. 13.0 13.1 Khomdan Singh Lisam, Encyclopaedia Of Manipur, ISBN 978-8178358642, pp. 322–347
 14. "Eight Schedule of the Constitution of India" (PDF). Mha.nic.in. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
 15. "History of Meetei Mayek". Tabish.freeshell.org. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
 16. "Manipuri language and alphabets". Omniglot.com. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
 17. Laithangbam, Iboyaima (23 September 2017). "Banished Manipuri script stages a comeback" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/banished-manipuri-script-stages-a-comeback/article19743482.ece. 
 18. "Bangladesh: Situation and treatment of Hindu Manipuri ethnic minority, including women; ability of women, particularly Manipuri women, to relocate and access housing and employment within Bangladesh (2006-October 2013)". Refworld. Canada: Immigration and Refugee Board of Canada. 9 October 2013. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
 19. "Names of 12 months of Kangleipak concepts and significances". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 25 May 2020.
 20. "Manipuri Cinema". kanglafilms.com. Archived from the original on 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016.
 21. "91st Academy Awards Rules" (PDF). The Oscars. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்தெய்_மக்கள்&oldid=3766867" இலிருந்து மீள்விக்கப்பட்டது