நம்புல் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்புல் நதி (Nambul River) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பால் நகரில் பாயும் ஒரு நதியாகும்.[1]

போக்கு[தொகு]

நம்புல் நதி லோக்டாக் ஏரியில் உற்பத்தியாகும் முக்கிய வற்றாத தண்ணீர் ஆதாரங்களில் ஒன்றாகும். நம்புல் நதி உள்நாட்டு முதன்மை நீர்வழிகளில் ஒன்றாகும். இந்நதி பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளையும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதி கிராமங்களையும் இம்பாலுடன் இணைப்பதால் முக்கிய வணிக மற்றும் சந்தை மையமாக திகழ்கிறது.

சமீப காலங்களில் மணிப்பூரின் பொருளாதார முக்கியத்துவம் உள்ள இந்த வற்றாத நதியின் அருகில் நம்புல் நதியின் பெரிய வடிகாலாக இப்போது 'நம்புல் நளா' என்ற கிளை நதி உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்கள்[தொகு]

நம்புல் நதியில் "கநாப்" (Pangio pangia), "கசெப்" (Mystus bleekeri) மற்றும் "கமு சாங்யும்" (Garra manipurensis) போன்ற மீன் வகைகள் இருந்தன.

ஆனால் நம்புல் நதியின் அதிக சுரண்டல் மற்றும் மாசு காரணமாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்த மீனினங்கள் அழிந்து போயின.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "No end to polluting Nambul river". The Sangai Express. 2015-06-24 இம் மூலத்தில் இருந்து 2016-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160616224504/http://www.thesangaiexpress.com/no-end-to-polluting-nambul-river/. பார்த்த நாள்: 2016-06-12. 
  2. Samom, Sobhapati (2008-05-04). "Polluted River in Manipur Devastates Fish and Humans". Newsblaze.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்புல்_நதி&oldid=3217941" இலிருந்து மீள்விக்கப்பட்டது