லோக்டாக் ஏரி

ஆள்கூறுகள்: 24°33′N 93°47′E / 24.550°N 93.783°E / 24.550; 93.783
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக்டாக் ஏரி
அமைவிடம்மணிப்பூர்
ஆள்கூறுகள்24°33′N 93°47′E / 24.550°N 93.783°E / 24.550; 93.783
வகைநன்னீர் ஏரி
முதன்மை வரத்துமணிப்பூர் ஆறு

லோக்டாக் ஏரி (Loktak Lake) ஒரு நன்னீர் ஏரியாகும். இது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மொய்ராங் பகுதியில் அமைந்துள்ளது[1]. இது மிதக்கும் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது. லோக் எனும் மணிப்பூரிச் சொல்லுக்கு சிற்றோடை எனவும் டாக் எனும் சொல்லுக்கு முடிவு என்றும் பொருள். இந்த ஏரிப்பகுதியில் கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா 40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பழமையான ஏரி மணிப்பூர் மாநிலத்தின் பொருளாதார மூலமாக விளங்குகிறது. இந்த ஏரியின் தண்ணீரானது மின்சார உற்பத்தி, குடிநீர் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் இப்பகுதி மக்களின் முக்கிய மீன்பிடித் தலமாகவும் இந்த ஏரி விளங்குகிறது. இந்த ஏரியின் மீது மக்களின் தாக்கம்(severe pressure) அதிக அளவு உள்ளது. இந்த ஏரியைச் சுற்றி 1,00,000 மக்கள் வசிக்கின்றனர். 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தியதி இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த எரியின் சராசரி வருடாந்திர மழையளவு 1,183 மில்லிமீட்டர்கள் ஆகும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் வறட்சியான மாதங்கள் ஆகும். இந்த ஏரியில் 105 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Integrated Wetland and River Basin Management – A Case Study of Loktak Lake". Wetlands International - South Asia, New Delhi, India. Archived from the original on March 22, 2012. பார்க்கப்பட்ட நாள் 2009-04-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்டாக்_ஏரி&oldid=3588097" இலிருந்து மீள்விக்கப்பட்டது