மோரே, இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோரே, மியான்மர் நாட்டின் எல்லைக்கருகில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்திலுள்ள இந்திய நகரமாகும். இங்கு குக்கி எனப்படும் இன மக்கள் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்களும், நேபாளிகளும், மெய்தெய் இன மக்களும் வாழ்கின்றனர். இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகங்களில் பெரும்பான்மை இவ்வூரிலேயே நடைபெறுகின்றன. இவ்வூர் தென்கிழக்காசியாவின் வாசல் என்றழைக்கப்படுகிறது. மியான்மரிலிருந்து நாடு திரும்பிய தமிழர்கள் பலர் இங்கு வாழ்கின்றனர். அதனால் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் இங்கு காணமுடியும். [1] புதிதாக தொடங்கப்படவிருக்கும் ஆசிய இரயில் போக்குவரத்து மூலம் சரக்குகளை தரைவழியாக சிங்கப்பூரிலிருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லலாம். இந்த இரயில் பாதை மோரே வழியாக செல்லும்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரே,_இந்தியா&oldid=1370800" இருந்து மீள்விக்கப்பட்டது