நிர்மலா சீத்தாராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
செப்டம்பர் 3, 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் அருண் ஜெட்லி
வர்த்தக, தொழில்துறை அமைச்சர்[1]
பதவியில்
மே 26, 2014 – செப்டம்பர் 15, 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ஜெயந்த் சின்ஹா
பின்வந்தவர் சுரேஷ் பிரபு
பாசக பேச்சாளர்
பதவியில்
2010–2014
பின்வந்தவர் சாயினா
ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
26 சூன் 2014 – 21 சூன் 2016
கருநாடக மாநிலங்களவை உறுப்பினர்[2]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 சூலை 2016
முன்னவர் வெங்கையா நாயுடு, பாசக
தனிநபர் தகவல்
பிறப்பு 18 ஆகத்து 1959 (1959-08-18) (அகவை 59)
மதுரை, சென்னை மாநிலம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பரக்கல பிரபாகர்
பிள்ளைகள் 1
இருப்பிடம் ஐதராபாது, தெலுங்கானா, இந்தியா[3][4]
படித்த கல்வி நிறுவனங்கள் சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

நிர்மலா சீத்தாராமன் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்திய நடுவணரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார்.[5] இப்பதவிக்கு முன் இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக உள்ளார்.[7]

கல்வி[தொகு]

நிர்மலா சீத்தாராமன் 1980 இல் திருச்சியிலுள்ள சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[8] பின்னர் உயர்கல்வியினை தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பயின்றார்.

வாழ்க்கை[தொகு]

இவரின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டுப் பெண் ஆவார்.[9] நிர்மலா சீத்தாராமன், டாக்டர். பராகலா பிரபாகரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.[10][11]

பணி[தொகு]

நிர்மலா சீத்தாராமன் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராவார் (2003-2005). இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆறு பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் குழுவில் ஒருவராவார்.

வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்[தொகு]

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 26, 2014 அன்று நிர்மலா சீத்தாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் பிரதமர் நரேந்திர மோதியின் இணைஅமைச்சர்களில் ஒருவராவார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர்[தொகு]

2017 செப்டம்பர் 3 முதல் இந்திய நடுவணரசு பாதுகாப்புதுறை அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார் நிர்மலா சீதாராமன்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_சீத்தாராமன்&oldid=2624832" இருந்து மீள்விக்கப்பட்டது