தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியா
Appearance
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 15 ஆகஸ்டு 1947 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | புது தில்லி |
பணியாட்கள் | 4,012 (2016)[1] |
ஆண்டு நிதி | ரூபாய் 4071.23 கோடி(2021-22)[2] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், (Ministry of Information and Broadcasting (India)), இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் ஆவார். இந்திய அரசின் ஒலி-ஒளிபரப்புப் பிரிவான பிரசார் பாரதி மற்றும் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகள்
[தொகு]- தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி மூலம் மக்களுக்கு செய்திச் சேவைகள் வழங்குதல்
- திரைப்படங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி.
- திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு.
- திரைப்பட விழாக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களின் அமைப்பு.
- விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகம்
- இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளை முன்வைப்பதற்கும், அரசாங்கக் கொள்கைகள் பற்றிய கருத்துக்களைப் பெறுவதற்கும், பத்திரிகை உறவுகளைக் கையாள்வதற்கு பத்திரிகை தகவல் பணியகம் உதவுகிறது
- பத்திரிகை நிர்வாகம் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம் மற்றும் 1867 செய்தித்தாள்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தல்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் வெளியீடுகள் மூலம் இந்தியாவைப் பற்றிய தகவல்களை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பரப்புதல்.
- அமைச்சின் ஊடகப் பிரிவுகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உதவுவதற்கு ஆராய்ச்சி, குறிப்பு மற்றும் பயிற்சி.
- பொது நலன் சார்ந்த பிரச்சனைகளில் தகவல் விளம்பர பிரச்சாரங்களுக்கு தனிப்பட்ட தொடர்பு மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்களைப் பயன்படுத்துதல்.
- தகவல் மற்றும் வெகுஜன ஊடகத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பு.
அமைப்புகள்
[தொகு]தன்னாட்சி அமைப்புகள்
[தொகு]பிற அமைப்புகள்
[தொகு]- பிஎஸ்என்எல்
- அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகம்
- சமூக வானொலி நிலையங்கள்
- தனியார் தொலைக்காட்சிகள் ஒழுங்குமுறை
- வீட்டிற்கு நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு (DTH)
- இணைய நெறிமுறை தொலைக்காட்சி (IPTV)
- உலகம் முழுவதும் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரிமம் வழங்கும் அமைப்பு
பயிற்சி நிறுவனங்கள்
[தொகு]- திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா), புனே
- சத்தியஜித்ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனம், அகர்தலா, திரிபுரா [3]
- இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம்[4]
தகவல் தொடர்பு மற்றும் விளம்பரம்
[தொகு]- விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகம் (DAVP)
- மத்தியத் தகவல் பணியகம் (CBC)[5]
- கள விளம்பர இயக்குனரகம்
- புகைப்பட பிரிவு
- வெளியீடுகள் பிரிவு
- ஆராய்ச்சி குறிப்பு மற்றும் பயிற்சி பிரிவு
- பாடல் மற்றும் நாடகப் பிரிவு
- இந்தியச் செய்தித்தாள்களின் பதிவாளர் அலுவலகம் (RNI)[6]
- இந்தியப் பத்திரிகையாளர் மன்றம்[7]
- பத்திரிகை தகவல் பணியகம்
- மக்கள் தொடர்பு நிறுவனம், இந்தியா (IIMC)
திரைப்படத் தணிக்கை, மேல்முறையீடு மற்றும் வளர்ச்சி
[தொகு]- இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு
- திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
- தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Central govt to hire 2.8 lakh more staff, police, I-T & customs to get lion's share - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Budget data" (PDF). www.indiabudget.gov.in. 2022.
- ↑ சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அக்டோபர் முதல் திரிபுராவில் வளாகத்தைத் தொடங்க உள்ளது
- ↑ The Indian Institute of Mass Communication
- ↑ Central bureau of Communications
- ↑ Registrar of Newspapers
- ↑ Press Council of India