சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்தியா
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சாஸ்திரி பவன் சி- தொகுப்பு இராஜேந்திர பிரசாத் சாலை புது தில்லி 110011, இந்தியா |
ஆண்டு நிதி | ரூபாய் 6908 கோடி (2017-18 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
வலைத்தளம் | socialjustice |
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்த அமைச்சகம் பட்டியல் சமூகம், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நங்கை, நம்பி, ஈரர், திருனர், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு இது பொறுப்பாகும்.[2] பாகுபாடு-எதிர்ப்புக் கொள்கைகளை சிறப்பாகச் செயல்படுத்த, இந்த ஓரங்கட்டப்பட்ட குழுக்களைப் பற்றிய சட்டத்தை அமல்படுத்துவதற்கும் இது உதவுகிறது.[2] இதன் மூத்த அமைச்சர் வீரேந்திர குமார் காதிக் ஆவார்.[3] இணை அமைச்சர்கள் [ராம்தாஸ் அதவாலே]], பிரதிமா பூமிக் மற்றும் அ. நாராயணசாமி ஆவர்.
அமைப்பு
[தொகு]இந்த அமைச்சகம் ஐந்து பணியகங்களைக் கொண்டுள்ளது. அவைகள் ஒவ்வொன்றும் ஒரு இணைச் செயலாளர் தலைமையில்: பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் மேம்பாட்டு பணியகம்; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பணியகம், மகளிர் & ஊனமுற்றோர் பணியகம்; சமூக பாதுகாப்பு பணியகம்; மற்றும் திட்டம், ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பணியகம்.
சட்டப்பூர்வ அமைப்புகள்
[தொகு]- மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் அலுவலகம், புது தில்லி
- மதியிறுக்கம் (ஆட்டிசம்) உள்ள நபர்களின் நலனுக்கான தேசிய அறக்கட்டளை
- இந்திய மறுவாழ்வு நிறுவனம்
தேசிய நிறுவனங்கள்
[தொகு]- அலி யாவர் ஜங் தேசிய செவித்திறன் குறைபாடு நிறுவனம், மும்பை (AYJNIHH)
- தீன்தயாள் உபாத்யாயா உடல் ஊனமுற்றோருக்கான நிறுவனம், புது தில்லி
- இயக்க நரம்பணு குறைபாடுகளுக்கான தேசிய நிறுவனம், கொல்கத்தா
- தேசிய மனநலம் பாதிக்கப்பட்டோர் நிறுவனம், செகந்திராபாத் (NIMH)
- தேசிய பார்வை ஊனமுற்றோர் நிறுவனம் (NIVH), தேராதூன்
- தேசிய மறுவாழ்வு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கட்டாக் (NIRTAR)
- பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD), சென்னை
- இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC)
பொதுத்துறை நிறுவனங்கள்
[தொகு]- தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NBCFDC)
- தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC)
- இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (ALIMCO), கான்பூர்
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையங்கள்
பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு நிறுவனம்
[தொகு]- இந்திய முதுகெலும்பு காய சிகிச்சை மையம்
நிறைவேற்றும் சட்டம்
[தொகு]- பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம், 2007
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Budget data" (PDF). www.indiabudget.gov.in. 2019. Archived from the original (PDF) on 4 March 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2018.
- ↑ "Subjects Allocated : Department of Social Justice and Empowerment - Government of India". socialjustice.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.
- ↑ Ministers and therir Mistries of India