உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதிமா பூமிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதிமா பூமிக் (பிறப்பு 28 மே 1969) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் தற்போது இரண்டாவது மோடி அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் மத்திய இணையமைச்சராக பணியாற்றுகிறார்.[1] திரிபுராவை பூர்வீகமாகக் கொண்ட வடகிழக்கில் இருந்து மத்திய அமைச்சராகும் இரண்டாவது பெண்மணி இவர்.[2] மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக திரிபுரா மேற்கு பகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

இவர் தற்போது இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.

கல்வி

[தொகு]

பிரதிமா பௌமிக் 1991 இல் திரிபுரா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அகர்தலா மகளிர் கல்லூரியில் உயிரி அறிவியலில் பட்டம் பெற்றவர்.[சான்று தேவை]

மக்களவை நிலைக்குழு

[தொகு]
  • உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நிலைக்குழு
  • உறுப்பினர், சபையின் அமர்வில் உறுப்பினர்கள் இல்லாத குழு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  2. "Pratima Bhowmik: First Tripura resident to make it to Union cabinet". 8 July 2021.
  3. "Pratima Bhoumik(Bharatiya Janata Party(BJP)):Constituency- TRIPURA WEST(TRIPURA) - Affidavit Information of Candidate".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிமா_பூமிக்&oldid=3742750" இலிருந்து மீள்விக்கப்பட்டது