திரிபுரா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிபுரா பல்கலைக்கழகம் என்பது இந்திய அரசால், திரிபுரா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம். இதன் வளாகம், திரிபுரா தலை நகர் அகர்தலாவிலிருந்து `0 கி.மீ தொலைவில் உள்ள சூரியமணி நகரில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துடன் இருபதுக்கும் அதிகமான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல் துறை
  • கணிதவியல் துறை
  • கணினிப் பொறியியல் துறை
  • காட்டியல் மற்றும் உயிர்ப்பன்மையியல் துறை
  • தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் கணினித் துறை
  • தாவரவியல் துறை
  • நுண்ணுயிரியல் துறை
  • புவியியல் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
  • புள்ளியியல் துறை
  • மருந்தகவியல் துறை
  • மனிதவியல் துறை
  • மின் பொறியியல் துறை
  • மூலக்கூற்றியல் துறை
  • விலங்கியல் துறை
  • வேதியியல் துறை

கலை[தொகு]

  • அரசியல் துறை
  • ஆங்கில மொழித் துறை
  • இசைத் துறை
  • இந்தி மொழித் துறை
  • உளவியல் துறை
  • ஊரக வளர்ச்சித் துறை
  • கல்வித் துறை
  • கலைத் துறை
  • சட்டத் துறை
  • சமசுகிருதத் துறை
  • சமூகவியல் துறை
  • பொருளியல் துறை
  • மெய்யியல் துறை
  • மேலாண்மைத் துறை
  • வங்காள மொழித் துறை
  • வரலாற்றுத் துறை

பட்டயம்[தொகு]

  • பழங்குடியினர் மொழி
  • மூங்கில் பயிரிடுதல்
  • ரப்பர் தொழில் நுட்பம்

நூலகம்[தொகு]

முன்பிருந்த கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான நூல்கள் பெறப்பட்டு, நூலகம் அமைக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள பெரிய நூலகங்களில் இதுவும் ஒன்று. துறைசார்ந்த நூல்கள் பலவும் சேகரிக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு அளவிலான ஆய்விதழ்களும் சேகரிக்கப்படுகின்றன. இணைய இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_பல்கலைக்கழகம்&oldid=2222355" இலிருந்து மீள்விக்கப்பட்டது