உள்ளடக்கத்துக்குச் செல்

வீரேந்திர குமார் காதிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் வீரேந்திர குமார் காதிக்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் இணை அமைச்சர்
பதவியில்
3 செப்டம்பர் 2017 – 29 மே 2019
சிறுபான்மையோர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர்
பதவியில்
3 செப்டம்பர் 2017 – 29 மே 2019
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்நாது ராம் அகிர்வார்
தொகுதிதிகம்கர் மக்களவைத் தொகுதி[1]
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–2009
முன்னையவர்ஆனந்த் அகிர்வார்
பின்னவர்பூபேந்திர சிங்
தொகுதிசாகர் மக்களவைத் தொகுதி [2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 பெப்ரவரி 1954 (1954-02-27) (அகவை 70)
சாகர், மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கமல் வீரேந்திரா
பிள்ளைகள்மகன் 1 & மகள்கள் 3
வாழிடம்சாகர்
கல்விமுதுகலை (பொருளாதரம்), முனைவர் பட்டம் (குழந்தை தொழிலாளர்)
முன்னாள் கல்லூரிடாக்டர். ஹரி சிங் கௌர் பல்கலைக் கழகம், சாகர், மத்தியப் பிரதேசம்

வீரேந்திர குமார் காதிக் (Dr. Virendra Kumar Khatik) (பிறப்பு:27 பிப்ரவரி 1954) பாரதிய ஜனதா கட்சியின் தலித் அரசியல்வாதியான இவர் இந்தியாவின் 12, 13, 14, 15, 16 மற்றும் 17வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக, 1996 முதல் 2019 முடிய, மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மக்களவைத் தொகுதி மற்றும் திக்கம்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தேடுக்கப்பட்டவர்.[4][5] இவர் தற்போது 2019 முதல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக உள்ளார்.[6]

மத்திய இணை அமைச்சராக

[தொகு]

நரேந்திர மோதியின் முதலாம் அமைச்சரவையில் இவர் 3 செப்டம்பர் 2017 – 29 மே 2019 வரை மகளிர் & குழந்தைகள் நலம் மற்றும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக பணியாற்றியவர்.

மக்களவையின் இடைக்காலத் தலைவராக

[தொகு]

16 சூன் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் வீரேந்திர குமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.[7][8]

புதிததாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட 17வது மக்களவை உறுப்பினர்களுக்கு, 17 & 18 சூன் 2019 அன்று, இடைக்கால மக்களவை சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.[9]

19 சூன் 2019 அன்று கூடும் பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தின் போது இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் தலைமையில் பதினேழாவது மக்களவைக்கு சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதுவரை வீரேந்திரகுமார் இடைக்கால சபாநாயகராகத் தொடர்வார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tikamgarh Lok Sabha constituency
  2. Sagar (Lok Sabha constituency)
  3. https://www.india.com/hindi-news/india-hindi/a-complete-profile-of-modis-new-minister-virendra-kumar-khatik/
  4. Profile of Members of Seventeenth Lok Sabha
  5. "Profile of Dr. Virendra Kumar". Archived from the original on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  6. Ministers and therir Mistries of India
  7. மக்களவையின் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார்!
  8. Virendra Kumar to be Pro tem Speaker of Lok Sabha
  9. முதல் நாளன்று பதினேழாவது மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றவர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்திர_குமார்_காதிக்&oldid=4009304" இலிருந்து மீள்விக்கப்பட்டது