உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ்குமார் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்குமார் சிங்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்மீனா சிங்
தொகுதிஆரா
மின்சக்தி துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
பதவியில் உள்ளார்
பதவியில்
3 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்பியுஷ் கோயல்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்பியுஷ் கோயல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 திசம்பர் 1952 (1952-12-20) (அகவை 71)
சுபால், பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சீலா சிங்
பிள்ளைகள்1 மகன் (சமீர் சிங்)
1 மகள் (சுவேதா சிங்)
வாழிடம்(s)பாட்னா, பீகார்

ராஜ்குமார் சிங் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1975 ஆம் ஆண்டு ஐ. ஏ. எஸ் ஆகவும், பின்னர் இந்திய உள்துறைச் செயலாளராகவும் இருந்தார்.[1][2]இவர் தற்போது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக உள்ளார்.

இளமைக் காலம்

[தொகு]

இவர் 1952 ஆம் ஆண்டின் திசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் தலைநகரான பட்னாவைச் சொந்த ஊராகக் கொண்டவர். இவருக்கு சீலா சிங் என்னும் மனைவியும், சமீர் சிங் என்னும் மகனும், சுவேதா சிங் என்னும் மகளும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், ஆரா மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை, மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகித்து வருகிறார்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "Former Home secretary battles caste in Bihar". OdishaSunTimes.com. 28 November 2013. Archived from the original on 19 April 2014. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
  2. "Ex-Home Secy RK Singh joins BJP, likely to contest LS polls". Zeenews.india.com. Archived from the original on 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013.
  3. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்குமார்_சிங்&oldid=3784969" இலிருந்து மீள்விக்கப்பட்டது