கிரண் ரிஜிஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் ரிஜிஜூ
The Minister of State for Home Affairs, Shri Kiren Rijiju addressing the ‘India Disaster Response Summit’, in New Delhi on November 09, 2017.jpg
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
பதவியில்
30 மே 2019 - 7 சூலை 2021
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் விரேந்திர குமார்
உள்துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 - 30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
மேற்கு அருணாச்சலம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2014
பதவியில்
2004 – 2009
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 29, 1971 (1971-11-29) (அகவை 51)[1]
நப்ரா, மேற்கு காமெங் மாவட்டம், அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜோரம் ரீனா ரிஜிஜூ
இருப்பிடம் 9, கிருட்டிண மேனன் மார்க், புது தில்லி – 110011
கல்வி பி. ஏ, எல். எல்.பி[2]
படித்த கல்வி நிறுவனங்கள் ஹன்ஸ்ராஜ் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்
இணையம் sites.google.com/site/kirenrijiju/

கிரண் ரிஜிஜூ (Kiren Rijiju, பிறப்பு: 19 நவம்பர் 1971) என்பவர் அருணாச்சலப் பிரதேச மாநில வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இளமைக் காலம்[தொகு]

இவர் நவம்பர் 19, 1971 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தின், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள நப்ரா அருகிலுள்ள நாகுவில் பிறந்தார். இவரது தந்தை சிறீ ரிஞ்சின் கரு மற்றும் தாயார் சிரை ரிஜிஜூ ஆகியோர் ஆவர். இவர் தில்லி பல்கலைக்கழகத்தின், ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பையும், மற்றும் கேம்பஸ் சட்ட மையத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

கிரண் ரிஜிஜூ 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பின்னர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகத்தின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.[5][6][7] பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்னர் மே 2019 ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சராகப் (தனிப்பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.[8][9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kiren Rijiju, a youth leader from Arunachal Pradesh". Ibn Live. Press Trust of India. 26 May 2014. 29 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "KIREN RIJIJU BIOGRAPHY AND 2014 ELECTION RESULT". Compare Infobase Limited. 8 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. C. B. Namchoom. "The saffron man, now playing the Jai Ho tune". eastern panorama. 8 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sixteenth Lok Sabha Members from Arunachala Pradesh
  5. "Union Council of Ministers". india.gov.in. 2014-12-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Full list: PM Modi's new-look Cabinet". The Times Times of India. 6 July 2016.
  7. "President of India allocates portfolios of the Council of Ministers". Press Information Bureau. 3 September 2017. http://www.pib.gov.in/newsite/erelease.aspx. பார்த்த நாள்: 3 September 2017. 
  8. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (ஆங்கிலம்). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.
  9. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  10. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_ரிஜிஜூ&oldid=3636077" இருந்து மீள்விக்கப்பட்டது