புவி அறிவியல் துறை அமைச்சகம்
இந்தியக் குடியரசு புவி அறிவியல் துறை அமைச்சகம் | |
---|---|
![]() | |
இந்திய தேசிய இலச்சினை | |
துறை மேலோட்டம் | |
அமைப்பு | 2006 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | பிரித்வி பவன் லோடி சாலை, புது தில்லி 28°35′28″N 77°13′32″E / 28.59111°N 77.22556°E |
ஆண்டு நிதி | ₹1,800 கோடி (US$235.98 மில்லியன்) (2018-19 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் | ஹர்ஷ் வர்தன் |
வலைத்தளம் | |
www.moes.gov.in |
புவி அறிவியல் அமைச்சகம் (The Ministry of Earth Sciences) இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி), [2] இடைநிலை அளவிலான வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்), [3] இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்), புனே [4] மற்றும் பூமி இடர் மதிப்பீட்டு மையம் (EREC), மற்றும் பெருங்கடல் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் இணைப்பிலிருந்து 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [5]
வரலாறு[தொகு]
1981 ஆம் ஆண்டில் அமைச்சரவை செயலகத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு பெருங்கடல் மேம்பாட்டுத் துறையை (டிஓடி) உருவாக்கியது. இது நேரடியாக இந்தியப் பிரதமரின் பொறுப்பில் வைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் இது ஒரு தனித்துறையாக மாறி கடல் மேம்பாட்டுத் துறையில் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டில் இது பெருங்கடல் மேம்பாட்டு அமைச்சகம் என்று ஒரு தனி அமைச்சகமாக மாற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு சூலையில், அமைச்சகம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. புதிய புவி அறிவியல் அமைச்சகம் அதன் நோக்கத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களுடன் நடைமுறைக்கு வந்தது. 2006 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் அரசாங்கம் இந்திய அளவீட்டுத் துறை, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் இடைநிலை அளவிலான வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்) ஆகியவற்றை அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானம் அணுசக்தி ஆணையம் மற்றும் விண்வெளி ஆணையம் போன்று புவி ஆணையத்தையும் அமைத்தது. [6] [7] தற்போது, அமைச்சகத்திற்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குகிறார்.
செயல்பாடுகள்[தொகு]
வளிமண்டல அறிவியல், பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நில அதிர்வு ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் கவனிப்பதே அமைச்சின் ஆணை ஆகும்..
மேற்கோள்[தொகு]
- ↑ "Budget data" (PDF) (2019). மூல முகவரியிலிருந்து 4 March 2018 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "India Meteorological Department".
- ↑ "National Centre for Medium Range Weather Forecasting (NCMRWF)". மூல முகவரியிலிருந்து 25 April 2019 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Indian Institute of Tropical Meteorology".
- ↑ Earth Sciences Ministry is the new name தி இந்து, May 11, 2006.
- ↑ "About us".
- ↑ "Ministry of-ocean-development-gets-a-new-name".