உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் தொடருந்து போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய இருப்புப் பாதை வரைபடம்

இந்தியாவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இரயில் போக்குவரத்தானது இந்திய இரயில்வே என்ற அரசு நிறுவனத்தினால் ஆளப்படுகிறது. இரயில் பாதைகள் நாடு முழுதும் பரவியுள்ளது. இதன் மொத்த நீளம் 6693 கிலோமீட்டர்கள் ஆகும். இது உலகின் மிகப் பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று ஆகும்.

இது ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. இது 28 மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது. மேலும் இது அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்றவற்றையும் இணைக்கிறது.

1855 இல் தானே அருகே குறுகிய தாணே ரயில்வே வாகனம்
1855 இல் தானே அருகே நீண்ட தாணே ரயில் பாதையில் ஒரு ரயில்.
1914இல் இருந்த மதராசு மற்றும் தென் மராட்டா ரெயில்வேயின் தடங்கள்.
1909இல் இந்திய இருப்புப் பாதைப் பிணையம்.

வரலாறு

இந்தியாவில் இருப்புப்பாதைக்கான திட்டம் 1832ஆம் ஆண்டில் வரையப்பட்டது. 1836 இல் முதல் இருப்புப் பாதை தற்போதைய சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகே சோதனையோட்டமாக அமைக்கப்பட்டது.[1][2] 1837இல் செங்குன்றம் ஏரிக்கும் செயின்ட்.தாமசு மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்கங்களுக்கும் இடையே 3.5-மைல் (5.6 km) தொலைவிற்கு இருப்புப் பாதை நிறுவப்பட்டது.[3] 1844இல் அப்போதைய கவர்னர் ஜெனரல் என்றி ஆர்டிஞ்ச் தனியார்த்துறையினரும் இருப்புப் பாதைகள் அமைக்க அனுமதித்தார்.

1845-ல் ராஜமுந்திரி அருகே , கோதாவரி ஆற்றின் குறுக்கே தவலேஸ்வரம் தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்காக இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.

பயணிகளுக்கான இரயில் சேவையானது இந்தியாவில் முதலில் மும்பை மற்றும் தாணே இடையே 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது[4]. 1947-இல் நாடு விடுதலை அடைந்த போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. பின்னர் 1951-இல் இது நாட்டுடமையாக்கப்பட்ட போது இது உலகின் பெரிய தொடர்வண்டி அமைப்புகளில் ஒன்றாக ஆனது.

வருடந்தோறும் சரக்கு கையாளும் திறன்[5][6][7][8][9][தொகு]

Si.No Year Actual Frieght loading in the year (in Million tonnes)
1 1950-51 73.2
2 1960-61 119.8
3 1970-71 167.9
4 1980-81 195.9
5 1990-91 318.4
6 2000-01 473.5
7 2003-4 557
8 2004-5 601.89
9 2006-7 727.75
10 2007-8 793.89
11 2008-9 833.39
12 2009-10 887.79
13 2010-11 921.73
14 2011-12 969.05
15 2012-13 1008.09
16 2013-14 1051.64
17 2014-15 1097.58
18 2015-16 1104.17
19 2016-17 1111
20 2017-18 1161
21 2018-19 1223
22 2019-20 1210
23 2020-21 1233
24 2021-22 1418
25 2022-23 1512

மேற்கோள்கள்[தொகு]

  1. "A railwayman recalls". The Hindu Business Line. 2005-09-09. பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.
  2. "Opening up new frontiers". The Hindu Business Line. 2006-10-27. பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.
  3. "Heritage consciousness". Chennai, India: The Hindu. 2004-01-26. http://www.hindu.com/mp/2004/01/26/stories/2004012600270300.htm. பார்த்த நாள்: 2010-08-02. 
  4. admin. "16th April – First Train From Mumbai To Thane | MeMumbai" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  5. https://indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/planning/downloads/1-c-Foreword%20.pdf
  6. https://indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/finance_budget/Previous%20Budget%20Speeches/2005-06.pdf
  7. https://indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/finance_budget/Previous%20Budget%20Speeches/2006-07.pdf
  8. https://indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/finance_budget/Previous%20Budget%20Speeches/2008-09.pdf
  9. https://indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/stat_econ/Stat_0910/Year%20Book%202009-10-Sml_size_English.pdf