உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் பசுமைப் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன இந்தியாவின் வரலாறு
குறித்த தொடரின் அங்கம்
விடுதலைக்கு முன்பு
பிரித்தானிய இந்தியப் பேரரசு (1858–1947)
இந்திய விடுதலை இயக்கம் (1857–1947)
இந்தியப் பிரிவினை (1947)
விடுதலைக்குப் பின்பு
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (1947–49)
மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)
கூட்டுசேரா இயக்கம் (1956– )
பசுமைப் புரட்சி (1970கள்)
இந்தியப் பாக்கித்தான் போர்
நெருக்கடி நிலை (1975–77)
இந்தியாவின் பொருளியல் தாராளமயமாக்கல்
2020களில் இந்தியா
இவற்றையும் காண்க
இந்திய வரலாறு
தெற்காசிய வரலாறு

இந்தியாவின் பசுமைப் புரட்சி (Green Revolution in India) என்று 1966ஆம் ஆண்டு முதல் இந்திய உணவுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீரிய ஒட்டு விதைகள், மேம்பட்ட உரவகைகள், மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டால் வேளாண்மை மேம்படுத்தப்பட்டு உணவுத் தன்னிறைவு பெற்றதே பசுமைப் புரட்சி ( Green Revolution) என்று அறியப்படுகிறது. அடிக்கடி பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஒருமுறை கூட பஞ்சம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1963ஆம் ஆண்டில் முனைவர் நார்மன் போர்லாக் இந்தியாவில் மரபுமாற்ற வீரிய கோதுமை விதைகளை அறிமுகப்படுத்தினார். இவரே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1]

முடிவுகள்[தொகு]

பல்வேறு வீரிய விதைகளில் கோதுமை சிறந்த ஈட்டைத் தந்தது. மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகளை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் அனைத்திந்திய வானொலியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்திய வேளாண் அறிவியலாளரும் இந்திய பசுமை புரட்சியின் தந்தையுமான எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் இந்திய நடுவண் அமைச்சில் வேளாண் அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் ஆகியோரின் கூட்டு முயற்சியும் பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

எதிர் கருத்துகள்[தொகு]

வேதிய பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதால் மண்ணின் தரம் குறைந்ததாக விமரிசனங்கள் எழுந்துள்ளன. இது எதிர்கால வேளாண்மையை பாதிக்கும் என்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பரவக் காரணமாக அமைந்ததாகவும் இயற்கை அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலங்களில் கரிமக் கிளைக்கொல்லிகளும் இயற்கை உரங்களும் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jakkir Hussain (ed.). வரலாற்றில் வண்ண புரட்சிகள். p. 23.