இந்தியாவின் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியப் பண்பாட்டை வடிவமைத்த இந்தியச் சமயங்கள்
Khajuraho - Kandariya Mahadeo Temple.jpg
Palitana.jpg
Mahabodhitemple.jpg
Golden Temple India.jpg
இந்திய நாட்டியங்கள்

மனித குலத்தின் மிகப்பழமையான பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும். இந்தியப் பண்பாட்டை வடிவமைப்பதற்கு இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியச் சமயங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளது.

ஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கலாச்சாரங்களின் கலவை என்றாலும், சீன, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, பூர்வீக அமெரிக்க பண்பாடுகள் போன்ற ஒரு தனித்துவமான பொது பண்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்பண்பாடு பல முனைவுகளில் இருந்து பெறப்பட்ட தாக்கங்களை உள்வாங்கி வெளிப்பட்டு நிற்கின்றது.

வட இந்தியா ஆசிய பெரு நிலப்பரப்பை அண்மித்து இருந்ததால், அது தென் இந்தியாவைக் காட்டிலும் பல்வேறு ஆளுமைகளுக்கு அல்லது தாக்கங்களுக்கு உட்பட்டது எனலாம். சில வரலாற்று அறிஞர்கள் தென் இந்தியா தொடர் வெளி ஆக்கிரமிப்புக்களுக்குள் உள்ளாகாததால், உண்மையான இந்திய பண்பாடு தென் இந்தியாவிலேயே கூடுதலாக வெளிப்பட்டு நிற்கின்றது என்பர். எனினும், தென் இந்தியாவின் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள், இலங்கையுடான உறவு, பிற கடல் வழி தொடர்புகள் இந்திய பண்பாட்டின் உருவாக்கத்தில், பரவுதலில் முக்கிய கூறுகள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவின்_பண்பாடு&oldid=2522468" இருந்து மீள்விக்கப்பட்டது