இந்தியாவில் இட ஒதுக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இட ஒதுக்கீடு சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலைகளில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூக தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். கிராமப்புற மக்கள் புதிய பொருளாதார/வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் பல படிப்பு/வேலை வாய்ப்புகளைப் பெறாமல் இழக்க நேரிடுகிறது எனக் கருதப்படுகிறது. சில நாடுகளில் இனப் பேராதிக்கத்தினாலும் இட ஒதுக்கீடு ஏற்படலாம், இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமானிய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும்.

சர்ச்சை[தொகு]

இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களைக் கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். ஏனெனில் இட ஒதுக்கீடு பலருக்கு எதிராக அமையும், அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தைக் குறைக்கிறது என்கின்றனர்.[சான்று தேவை]

இந்திய அரசின் இட ஒதுக்கீடு[தொகு]

பட்டியல் சமூகத்தினருக்கு மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு[தொகு]

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு[தொகு]

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (OBC) 27.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள்[தொகு]

முன்னாள் படைவீரர்களுக்கு (Ex_Servicemen) இந்திய அரசு மற்றும் இந்திய அரசு சார்ந்த பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[1] [2][3][4]

தேவையான கல்வித் தகுதி படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[5][6]

உயர் சாதி ஏழைகளுக்கு[தொகு]

அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள 15 மற்றும் 16-இன் கீழ் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதிகளின் ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் திருத்தம் செய்ய 124-வது அரசியலமைப்புச் திருத்தச் சட்ட மசோதா, சனவரி, 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.[7]பொதுப் பிரிவினரில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் 14 சனவரி 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.[8]

இச்சட்டத் திருத்தத்தின் படி உயர் சாதி பிராமணர், ராஜபத்திரர் (தாகுர்), ஜாட், மராத்தா, பூமிஹர், ஜெயின், நகரத்தார் போன்ற வர்த்தகச் சமூத்தைச் சேர்ந்த ஏழைகள் பயனடைவர். உயர் சாதியினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் அல்லது 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும்.

மாநில அரசுகளில் இடஒதுக்கீடு[தொகு]

[9]

  • சில மாநில அரசுகள் பெண்களுக்கு 30 முதல் 33% வரை வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[10]

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு[தொகு]

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு (SC) 15%, பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.[11]

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]