இட ஒதுக்கீடு, இந்திய நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்டியல் சமூகத்தினரும் பட்டியல் பழங்குடியினரும் இந்திய அரசியலில் பங்களிக்கும் விதமாக, இந்திய நாடாளுமன்றத்திற்கு 22 சதவீத தொகுதிகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு 84 தொகுதிகளும், பட்டியல் பழங்குடி மக்களுக்கு 47 தொகுதிகளும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[1] இவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தனித்தொகுதி என்பர்.

இட ஒதுக்கீட்டுச் சட்டம்[தொகு]

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பகுதி 330, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 3 (Article 330 of the Constitution of India read with Section 3 of the R. P. Act, 1950) மற்றும் 2008-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் படியும், (Representation of People Act, 1950 as amended vide Representation of People (Amendment) Act , 2008) ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மாநிலங்கள் வாரியாக தொகுதிகள் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ் நாட்டில்[தொகு]

தமிழ்நாட்டில், பட்டியல் சமூகத்தவர்களுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும்; 44 சட்டமன்ற தொகுதிகளும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியல் பழங்குடிகளுக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. State/UT wise Seats in the Lok Sabha and their reservation status
  2. TABLE A - ASSEMBLY CONSTITUENCIES & THEIR EXTENT

வெளி இணைப்புகள்[தொகு]